பஸ்கள் வெள்ளத்தில் போனதில் சாவு எண்ணிக்கை 145 ஆக உயர்வு
ராமநாதபுரம் - தஞ்சாவூர்:
![]() |
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பெய்யும் கன மழை காரணமாக சருகுனி ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்குஏற்பட்டுள்ளது. ஜனவேலி என்ற இடத்தில் இந்த ஆறு, கடலில் கலக்கிறது. இந்த இடத்தில் ஒரு பாலம் உள்ளது இந்தப் பாலத்தின்மீதும் வெள்ளம் நிறைந்து ஓடுகிறது.
இந் நிலையில் திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சென்ற பஸ் நேற்று இந்தப் பாலத்தில் மீது சென்றது. அதில் மொத்தம் சுமார்105 பேர் இருந்தனர். அப்போது காட்டாற்று வெள்ளம் பஸ்ஸை இழுத்துச் சென்றது. பயணிகளோடு அந்த பஸ் நீரில் உருண்டுசென்று கால்வாய்க்குள் விழுந்து மூழ்கியது.
![]() |
மிக சக்தி வாய்ந்த கிரேன்கள் கொண்டு வரப்பட்டு பஸ் நீரில் இருந்து வெளியே இழுக்கப்பட்டது. அதில் இருக்கைகளில்அமர்ந்தபடி 10 பேர் பிணமாகக் கிடந்தனர். இன்று காலை வரை பஸ் மற்றும் கால்வாய்க்குள் கிடந்த 44 பேரின் உடல்கள்மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
பட்டுக்கோட்டை: பஸ் கவிழ்ந்து 80 பேர் பலி
அதே போல தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டையை அடுத்த கொடிக்குளம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த தனியார்பேருந்து அஸ்வினி ஆற்று வெள்ளத்தில் சிக்கியது.
![]() |
பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மகாராஜா சமுத்திரம் என்ற இடத்தில்வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது. அதில் பயணம் செய்தவர்களில் 80 பேர் பலியாகிவிட்டனர். இதில் 10 பேர் ஒரே குடும்பத்தைச்சேர்ந்தவர்கள்.
இந்த இரு விபத்துக்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக் 220தைத்தாண்டிவிட்டது.
![]() |
ஆனால், இரு பஸ் விபத்துக்களிலும் பலியானவர்களின் எண்ணிக்கை வெறும் 67 தான் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
விபத்துக்களில் பலியான 67 பஸ் பயணிகளுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ள முதல்வர்ஜெயலலிதா, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 நிதியுதவி அறிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்
















Click it and Unblock the Notifications