வெள்ளச் சேத பகுதிகளில் ஜெ: ஹெலிகாப்டரிலும் ஆய்வு
சென்னை:
தமிழகத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இன்று முதலமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்றுபார்வையிட்டார். கடலூரில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
ஜெயலலிதா கடந்த 17ம் தேதி ஹைதராபாத் சென்று அங்குள்ள திராட்சை தோட்டத்தில் ஓய்வு எடுத்து வந்தார். தமிழ்நாட்டில்தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளதால் ஜெயலலிதா நேற்று மாலை உடனடியாக சென்னைதிரும்பினார்.
மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாதிப்புகள் அங்கு மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகள் குறித்துஅமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை 8.45 மணிக்கு அவர் சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் நெய்வேலி கிளம்பினார். 10மணிக்கு என்எல்சி ஹெலிபேடில் இறங்கிய அவர் அங்கிருந்து கார் மூலம் வடலூர் அருகே உள்ள மருவை கிராமத்துக்குச்சென்றார்.
அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். அப்போது அவரிடம் ஆண்களும், பெண்களும் திரண்டுவந்து கண்ணீருடன் உதவி கோரினர். அவர்களுக்கு ஜெயலலிதா ஆறுதல் கூறியதோடு, அனைத்து உதவிகளும் வழங்குவதாகஉறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட கலெக்டர் ககன்தீப்சிங் பேடியுடன் ஆலோசனை நடத்தினார். அங்கிருந்து குறிஞ்சிப்பாடிவந்த ஜெயலலிதா தாற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்தார். தானே சிலருக்கு உணவுப்பொட்டலஙகளையும் வழங்கினார்.
இதையடுத்து கடலூர் சென்ற ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை திரும்பினார்.
நாளை திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை பார்வையிடுகிறார். தொடர்ந்து நாளை மறுநாள்(திங்கட்கிழமை) மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்கயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப்பார்வையிடுகிறார்.
வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்படரின் மூலமும், இதர இடங்களில் காரின் முலமும் சென்று ஜெயலலிதாபார்வையிடுகிறார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நாளைதமிழகம் வருகிறார். அவருடன் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களும் பார்வையிடுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications