தமிழகத்தில் ஒரே மாதத்தில் 247 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய மீண்டும் ஒரு மத்திய குழு வரவிருக்கிறது என்றுமத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர் பாலு தெரிவித்தார்.
வங்ககடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் மழை காரணமாக தமிழகத்தில் இந்த மாதம் மட்டும் 247 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ராமநாதபுரம்மாவட்டத்தில் ஆற்றில் பஸ் முழ்கி உயிரிழந்தவர்களும் அடங்குவர். தென்னக மாவட்டத்திலிருந்து சென்னைக்கு சாலை, மற்றும்ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த போக்குவரத்து இயல்பு நிலைக்கு வரவில்லை.
இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா மகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைபார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார்.
இந்த பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும் மேலும் மழை பெய்ய வாய்ப்பு இல்லாத நிலையில்நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
தென்மாவட்டங்களில் எற்பட்டுள்ள வெள்ளத்தினால் தண்டவாளங்களில் தண்ணீர் புகுந்து இன்னும் வடியாத நிலையில்,சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் நீண்ட தூர ரயில்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தென்னகரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநில அரசு வெள்ள மீட்புப் பணிகளுக்கு ராணுவ உதவியை கோரியுள்ளது. கடலூர் பகுதியில் கடற்படை கப்பல்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டடுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள் மற்றும் நிவாரணபணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீண்டும் மத்திய குழு:
இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களை பார்வையிட மற்றொரு குழுவை மத்திய அரசு விரையில்அனுப்பி வைக்கவுள்ளது என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை பார்வையிட கடந்த வாரம் மத்திய குழு ஒன்றுதமிழகத்திற்கு வந்தது. ஆனால் அவர்கள் வந்து சென்ற பிறகு மீண்டும் ஒரு புயல் உருவாகி மாநிலம் முழுவதும் பலத்த சேதத்தைஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து தமிழக்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி நேற்று மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்தார். இதனால் மீண்டும் ஒரு மத்திய குழுவை மழை வெள்ளச் சேதங்களை பார்வையிட தமிழகத்திற்கு அனுப்ப பிரதமர்மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications