ரயில்கள் இன்றும் ரத்து- ஆம்னி பஸ்கள் வசூல் வேட்டை
சென்னை:
சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்பட தென் மாவட்டங்களுக்கு கடந்த 23ம் தேதி புறப்பட்டுசென்ற அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் நடுவழியில் நிற்கின்றன. இதே போல் சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றரயில்களும் இன்று பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று ரத்தாகும் ரயில்கள்: (26.11.05)சென்னை-எழும்பூர் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்-திருச்சி பல்லவன் எக்ஸ்பிரஸ், எழும்பூர்-வைகை எக்ஸ்பிரஸ்,எழும்பூர்-முத்துநகர் எக்ஸ்பிரஸ், எழும்பூர்-பாண்டியன் எக்ஸ்பிரஸ், சென்னை-திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், எழும்பூர்-கோவைஎக்ஸ்பிரஸ், தஞ்சை-கோவை எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்-நெல்லை எக்ஸ்பிரஸ், தஞ்சாவூர்-கோவை-தஞ்சாவூர் ஜன் சதாப்திஎக்ஸ்பிரஸ்
சென்னை எழும்பூர்-தூத்துக்குடி முத்து நகர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-சென்னை எழும்பூர்-அனந்தபுரி எக்ஸ்பிரஸ்,திருச்சி-எர்ணாகுளம்-திருச்சி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாதியில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: (26.11.05)
தாம்பரம்-மயிலாடுதுறை-சோழன் எக்ஸ்பிரஸ், விழுப்புரம்,மயிலாடுதுறை இடையே இன்று ரத்து செய்யப்பட்டது.
மாற்றுப்பாதையில் இயங்கும் ரயில்கள்:
சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் சென்னை கடற்கரை, அரக்கோணம், ஜோலார்பேட்டை,ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக செல்லும்.
சென்னை-எழும்பூர்-மதுரை-சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் கடற்கரை, அரக்கோணம், ஜோலார்பேட்டை,ஈரோடு,கரூர், திண்டுக்கல் வழியாக செல்லும்.
சென்னை எழும்பூர்-தூத்துக்குடி-முத்துநகர் எக்ஸ்பிரஸ் கடற்கரை, அரக்கோணம், ஜோலார்பேட்டை, ஈரோடு,கரூர், திண்டுக்கல்,மதுரை வழியாக செல்லும்.
சென்னை-கும்பகோணம் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் கடற்கரை, அரக்கோணம், ஜோலார்பேட்டை, ஈரோடு,கரூர் வழியாக செல்லும்.
கன்னியாகுமரி-ஹவுரா திருவனந்தபுரம்,எர்ணாகுளம், ஜோலார்பேட்டை, அரக்கோணம், கடற்கரை வழியாக எழும்பூர்வந்தடையும்.
பாண்டிச்சேரிக்கு இன்று விடப்பட்ட சிறப்பு ரயில் மாலை 6.30 மணிக்கு புறப்படும், எதிர் மார்க்கத்தில் மீண்டும் பாண்டிச்சேரியில்நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 4.30 மணிக்கு புறப்படும்.
நாளை ரத்து செய்யப்படும் ரயில்கள்: (27.11.05)
சென்னை எழும்பூர்-திருச்சி-பல்லவன் எக்ஸ்பிரஸ், சென்னை-எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ்.
நாளை பாதியில் ரத்து செய்யப்படும் ரயில்கள்: (27.11.05)
சென்னை-எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் சென்னைக்கும், திருச்சிக்கும் இடையிலும், தாம்பரம்-மயிலாடுதுறை சோழன்எக்ஸ்பிரஸ் விழுப்புரம்,மயிலாடுதுறைக்கு இடையிலும் ரத்து செய்யப்படுகின்றன.
சாலை போக்குவரத்து பாதிப்பு:
சென்னை-திருச்சி நேரடி பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல்வழியாக மதுரைக்கு மாற்றுப் பாதையில் பஸ்கள் செல்கிறது. மதுரையில் இருந்து பூவந்தி, சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி,புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
நாகப்பட்டினம், கும்பகோணம் சிதம்பரத்துக்கு பஸ் போக்குவரத்து இல்லை. சாலைகள் தெரியாத அளவுக்கு இன்னும் அந்தபகுதியில் வெள்ளம் ஓடி கொண்டிருக்கிறது. பெங்களூர், சேலம், புதுச்சேரி, பகுதிகளுக்கு மட்டும் பிரச்சினை இல்லாமல் பஸ்கள்செல்கிறது.
தென் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் சேலம் வழியாக சென்னைக்கு வருவதால் சேலம் பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சேலத்தில் இருந்து சென்னைக்கு கூடுதலாக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகிறது.
சென்னை-திருச்சி மெயின் ரோடு சீர் செய்யப்பட்டுள்ளது. எனவே இன்று மாலை முதல் சென்னையில் இருந்து திருச்சிக்கு நேரடிபஸ் போக்குவரத்து தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதித்துள்ளன. திருச்சி அருகேகுள்ளம்பாடியில் தண்டவாளத்தை மழை வெள்ளம் அடித்து சென்றது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ்ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் இரவு-பகலாக நடக்கிறது. இந்த பணியில் சுமார் 400 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தபணியை மத்திய ரயில்வே அமைச்சர் வேலு இன்று பார்வையிட்டார்.
சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, மதுரை வழியாக குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ், வைகை, பல்லவன்,தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம், சோழன், கம்பன் மற்றும் தஞ்சாவூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்பட 28 ரயில்கள் இன்றும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
ரயில்கள் ரத்தானதாலும் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாலும் ஆம்னி பஸ்களில் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும்வருபவர்களிடம் ரூ. 200 முதல் 300 வரை கட்டணத்தை கூடுதலாக வசூலித்து வருகின்றனர்.
பஸ்கள் ரத்தானதால் கோவை, சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பஸ் நிலையங்களில் திருவிழா கூட்டம்காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications