குஷ்பு-சுஹாசினி விவகாரம்: கருணாநிதி கருத்துக்கு மார்.கம்யூ. எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குஷ்பு- சுஹாசினி விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ள கருத்து எங்களுக்கு ஏற்புடையதல்ல என்று திமுககூட்டணி கட்சிகளில் ஒன்றான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் என். வரதராஜன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

குஷ்பு- சுஹாசினி தெரிவித்த கருத்துக்கள் ஏற்புடையதல்ல என்று ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்துதெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு திமுக தலைவர் கருணாநிதி, குஷ்பு சுஹாசினி விவகாரம் குறித்து, சில நேரங்களில் கருத்துசொல்லும் போது விளக்குமாறு, செருப்பு ஆகியவற்றை விட மோசமான அளவுக்கு கருத்து சொல்லப்பட்டிருக்கிறது. தமிழனுக்குகொம்பு முளைத்திருக்கிறதா? என்று கேட்பது செருப்பை விட, விளக்கு மாற்றை விட மோசமான கருத்தல்லவா? என்றுகூறியுள்ளார்.

கருத்து தெரிவிப்பது- அதை மறுத்து எதிர் கருத்து தெரிவிப்பது அல்லது ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு இயக்கங்கள் நடத்துவதுஎன்பது ஜனநாயக நடைமுறையாகும். இதற்கு மாறாக துடைப்பம், செருப்பு போன்றவைகளை வீசி வன்முறை தூண்டும்நடவடிக்கைகளில் ஈடுபடுவது விரும்பத்தக்கதல்ல என்றும் மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்திருந்தது.

இந்த விவகாரத்தில் தலையிட நான் விரும்பவில்லை என்று கூறிய திமுக தலைவர் மு.கருணாநிதி தற்போது இதில் பெரியமனிதர்கள் ஈடுபடுவது வேடிக்கையாக உள்ளது. இது எங்கு போய் முடியும் என்றால் மீண்டும் பிராமணர்-பிராமணரல்லாதோர்என்ற இயக்கத்தை வளர்க்க எங்களுக்கு பயன்படும் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ள கருத்து எங்களுக்கு ஏற்புடையதல்ல, இது தமிழக மக்கள் நலனுக்கும், மக்கள் ஒற்றுமைக்கும்உகந்ததல்ல என்று கூறியுள்ளார் வரதராஜன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+