கோவை அருகே சுவர் இடிந்தது: 3 பேர் பலி
கோயம்பத்தூர்:
கோவை அருகே தனியார் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்து 3 ஊழியர்கள் பரிதாபமாக செத்தனர்.
கோவையை அடுத்த சூலூர் அரசூர் ரோட்டில் தென்னம்பாளையம் பிரிவில் ஒரு தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்குவால்வுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.இந்த தொழிற்சாலையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பெரிய சுவர் அருகே மணல் குவித்துவைக்கப்பட்டிருந்தது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ததால் அந்த மணல் தண்ணீரில்நனைந்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை மணல் குவித்து வைக்கப்பட்டிருந்த சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் அந்த சுவற்றின்அருகில் பணிபுரிந்து கொண்டிருந்த 3 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை கோவையில் உள்ள ஒரு தனியார்மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி மதன்குமார் (வயது 26), சரவணராஜ் (வயது 25), அய்யனார் (வயது 26) ஆகிய 3 பேரும்பரிதாபமாக செத்தனர்.
இவற்றில் மதன்குமார் தொழிற்சாலையின் பராமரிப்பு பிரிவில் பணிபுரிந்து வந்தார். சரவணகுமார், அய்யனார் ஆகியோர்தரக்கட்டுப்பாடு பிரிவில் பணிபுரிந்து வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications