மதுரை வெள்ளச்சேதப் பகுதியில் சிவராஜ் பாட்டீல்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்பார்வையிட்டார்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள சேதத்தை பார்வையிடுவதற்காக உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையிலான மத்தியகுழு மதுரை வந்தது.இவர்களுடன் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ரகுபதி மற்றும் த.மா.கா. தலைவர் வாசன் ஆகியோர் வெள்ளம் பாதித்தபகுதிகளை பார்வையிட்டனர்.
வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்னும் 2 நாளில் மத்திய குழு தமிழகம் வரும் என மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல்தெரிவித்தார். தமிழக வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய குழு 9 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைபார்வையிட்டனர்.
பின்னர் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசு வெள்ள நிவாரணத்திற்காக 3ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி கோரியுள்ளது. வெள்ள பாதிப்புக்கான நிதியுதவி தாராளமாக அளிக்கப்படும் எனஅறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications