தூத்துக்குடியில் கடலில் படகு கவிழ்ந்து 10 பேர் சாவு? 4 உடல்கள் மீட்பு
தூத்துக்குடி:
தூத்துக்குடி கடலில் நேற்று படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 10 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றுஅஞ்சப்படுகிறது. இதுவரை 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் ம.ராபர்ட் (வயது65) இவருக்கு சொந்தமான பழைய படகில் புதிய என்ஜின்பொருத்தப்பட்டு கடலில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.இதற்காக ராபர்ட் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு காலையில் திரேஸ்புரத்தில் இருந்துபடகில் புறப்பட்டு சுமார் 3 கடல் மைல் தொலைவில் உள்ள முயல் தீவுக்குச் சென்றார்.
அவர்கள் அங்குள்ள உலக ரட்சகர் ஆலயத்தில் வழிபட்டு தாங்கள் கொண்டு சென்ற மதிய உணவை அங்கேயே சாப்பிட்டுவிட்டுஅங்கிருந்து மாலை 4 மணிக்கு படகில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
திரேஸ்புரக் கடற்கரையிலிருந்து சுமார் 1.5 கீமீ தொலைவில் வந்து கொண்டிருந்த போது திடீரென படகு கடலில் தலைக்குப்புறக்கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த ஆண்கள் சிலர் நீந்திக் கரை சேர்ந்தனர். மீதமுள்ளவர்கள் கடலில் மூழ்கினர். நீந்திக் கரைசேர்ந்தவர்கள் அங்குள்ள மீனவர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
உடனே கரையிலிருந்த மீனவர்கள் 100 பேர் சுமார் 10 படகுகளில் கடலுக்குள் சென்று நீரில் மூழ்கியவர்களை தேடினர்.
தண்ணீரில் மூழ்கி இறந்த 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டன. அவர்கள் பெயர் விவரம் வருமாறு:
ராபர்ட் (வயது 65), ஏஞ்சலா(வயது 14), ஜோன்சி (வயது 10), ஸ்விட்லின் (வயது7) ஆகியோர் ஆவர்.
கடலில் மூழ்கி உயிருடன் மீட்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்கள்டைசன் (வயது 10), புளோரா (வயது 50), எடிசன் (வயது 22), ஆஷா (வயது 10), ரெனிட்டா (வயது 25), டைட்டஸ்(வயது9),நிஷா(வயது 7), புனிதா (வயது 28), ஜெயசுரேதா (வயது 7), ஸ்வீட்டி (வயது 7), பவித்ரா (வயது 3), விவிசியா (வயது 5)ஆகியோர் ஆவர்.
கடலில் மூழ்கி மொத்தம் 10 பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீனவர்களும் கடலோரக் காவல் படையினரும்தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். திரேஸ்புரம் கடற்கரையில் திரளான மக்கள் வேதனையுடன் கூடியுள்ள
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications