தமிழக வெள்ளச் சாவுகள்: நாடாளுமன்றம் அஞ்சலி
டெல்லி:
தமிழகத்தில் பெய்த தொடர் மழையிலும் வெள்ளத்தில் இரு பஸ்கள் அடித்துச் செல்லப்பட்டதிலும் பலியான 273 பேருக்கு (இதுஅரசு கணக்கு) லோக்சபாவில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இன்று லோக்சபா கூடியதும் பேசிய அவைத் தலைவர் சோம்நாத் சேட்டர்ஜி,
தமிழகத்தில் 273 பேர் தொடர் மழைக்கு பலியாகியுள்ளனர். இதில் 2 பஸ்கள் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியதில் 123 பேர்இறந்துள்ளனர். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு இந்த அவை ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும்தமிழக மக்களின் துக்கத்திலும் இந்த அவை பங்கேற்கிறது என்றார்.
இதற்கிடையே ராஜ்ய சபாவில் தென் மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்கள் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகியபாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உடனடியாக வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி வலியுறுத்தினர்.
ராஜ்ய சபாவில் கேள்வி நேரத்தின் போது அதிமுக உறுப்பினர் பி.ஜி. நாராயணன் எழுந்து, தமிழகத்துக்கு உடனடியாக ரூ. 3000கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தமிழகத்துக்கு உடனடியாக நிதியுதவி வழங்கப்படும் என்றார்.
இதே போல பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்களும் மழையால் பாதிக்கப்பட்ட தங்களதுமாநிலங்களுக்கு நிவாரண நிதி கேட்டு வலியுறுத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications