தமிழகத்தை நெருங்கும் புயல்: இரவு முதல் மீண்டும் கன மழை- 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்
சென்னை:
வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிகவும் தீவிரமடைந்து புயல் சின்னமாக மாறிதமிழக-ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.
![]() |
| இன்று காலை 9 மணிக்கு எடுக்கப்பட்ட இன்சாட் செயற்கைக்கோள் படம் |
இதன் காரணமாக தமிழகம், புதுவை, தென் ஆந்திராவில் இன்று இரவு முதல் மீண்டும் கனமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்தமான் அருகே தென்கிழக்குப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த சனிக்கிழமை உருவானது. இது வடக்கு மற்றும்வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்றைய நிலவரப்படி சென்னைக்கு தென் கிழக்கே 1,000 கிமீ தொலைவில் நிலை கொண்டிருந்தது.
காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து மேற்கு வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை 4மணியளவில் அது தமிழக கடலோரத்தில் இருந்து 800 கி.மீ. தொலைவில் இருந்தது. மாலை 5.30 மணியளவில் புயல் சின்னம் 600கி.மீ. தொலைவை நெருங்கிவிட்டது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக, ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி வந்து கொண்டுள்ளது.
இதனால் இன்று இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, விழுப்புரம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சைஅகியவை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். மேலும் பாண்டிச்சேரியிலும் தெற்கு ஆந்திரப் பகுதிகளிலும் தென்கர்நாடகத்திலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.
வட தமிழக, தென் ஆந்திர கடலோர மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் பலத்த சூறைக் காற்று வீசும். அடுத்த48 மணி நேரத்துக்கு மாநிலத்தின் பல பகுதிகளிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இரு நாட்களாக மழை நின்றுள்ள நிலையில் இப்போது தான் மெல்ல மெல்ல வெள்ளம் வடிந்து வருகிறது.
இன்னும் இயல்பு நிலை திரும்பாமல் லட்சணக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் வசித்து வரும் நிலையில்அடுத்தும் ஒரு பயங்கர புயல் தமிழகத்தை நோக்கி வருவதால் மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்து போயுள்ளனர்.
இதற்கிடையே கடலுக்குள் சென்ற ராமநாதபுரம், நாகை, கடலூர் மாவட்ட மீனவர்கள் அவசரமாக கரை வந்து சேரஆரம்பித்துள்ளனர். இந்த கடலோரப் பகுதிகளில் எண்-1 புயல் எச்சரிக்கைக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னையை அடுத்த பொன்னேரி பழவேற்காடு கடல் பகுதியில் இப்போதே அலைகளின் சீற்றம் மிக அதிகமாகஉள்ளது. அலைகளின் உயரம் 10 அடிக்கும் மேல் அதிகமாகியுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.













Click it and Unblock the Notifications