ஜெவின் திருவாரூர், சிவகங்கை பயணம் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருவாரூர்-சிவகங்கை-பெரம்பலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை இன்று பார்வையிடுவதாக இருந்தமுதலமைச்சர் ஜெயலலிதாவின் சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை 4வது நாளாக சுற்றிப் பார்க்க முதலமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்திருந்தார்.இதன்படி திருவாரூர்-பெரம்பலூர், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களுக்கும் இன்று அவர் செல்வதாக இருந்தது.
வெள்ள பாதிப்பை பார்வையிட மத்திய குழுவினர் வந்திருப்பதால், அவர்களுடன் கலெக்டர்கள் உள்ளிட்ட மாவட்டஅதிகாரிகள் சென்று சேதமடைந்த பகுதிகளை சுற்றி காண்பிக்க இருப்பதாலும் முதல்வரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாககோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications