வெள்ளம்: நாளை கலாம் வருகை-ஜெவுடன் பேச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக வெள்ள நிலவரம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று தொலைபேசியில் விசாரித்தார்.மத்திய அரசு மூலமாக அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்த கலாம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ந நாளைஹெலிகாப்டரில் பார்வையிடவுள்ளார்.
இன்று காலையில் ஜெயலலிதாவிடம் பேசிய அவரிடம், மழை வெள்ளச் சேதங்களை கவலையுடன் விசாரித்தார். உயிர்களுக்கும்,உடமைகளுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும், அடிப்படைக் கட்டமைப்புக்கும், பயிர்களுக்கும் ஏற்பட்டுள்ள சேதத்தை முதல்வர்விளக்கினார்.
இதையடுத்து வெள்ளச் சேதத்தை நேரில் பார்வையிட தமிழகம் வருவதாக கலாம் கூறினார். நாளை கலாம் டெல்லியில் இருந்துதிருச்சி வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டப் பகுதிகளைப் பார்வையிடுகிறார்.
நாளை புயல் வலுத்தால் அவரது பயணத் திட்டத்தில் மாறுதல் ஏற்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications