கற்பு: பெரியார் சொன்னது என்ன?- கருணாநிதி
சென்னை:
தமிழனுக்கு கொம்பு முளைத்திருகிறதா என்பது போன்ற வன்முறையைத் தூண்டிவிடும் பேச்சுக்கள், தாக்குதல்கள் தரமானவைதானா என்பதை தங்கள் மனதுக்குள்ளாவது கேட்டுப் பார்த்துக் கொண்டால் நல்லது என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
முரசொலியில் அவர் எழுதியுள்ளதாவது:தமிழர்களுக்குக் கொம்பு முளைத்திருக்கிறதா என்று கேட்பது அவ்வளவு மோசமானது. சுகாசினி கூறியுள்ள கருத்துக்கள்துடைப்பம், செருப்பை விட மோசமானவை. அவரது பேச்சு எங்கு போய் முடியுமென்றால் பிராமணர், பிரமணரல்லாதோர் என்றுஇயக்கத்தை வளர்க்கவே எங்களுக்குப் பயன்படும் என்று கூறியதாக பத்திரிக்கைகளில் திரித்து செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
பிராமணர், பிராமணரல்லாதோர் என்று பிரச்சனை வந்துவிடக் கூடாது என்ற கருத்துப்பட நான் சொன்னதை திரித்துவெளியிட்டுவிட்டார்கள். இதைத் தான் பாஜக துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கண்டித்து பேட்டியளித்துள்ளார்.
மதவாதக் கொள்கைளை சுவாசித்துக் கொண்டிருக்கும் சில பாஸிஸ சக்திகள் இந்தப் பிரச்சனையைப் பயன்படுத்திக் கொண்டுதோகை விரிக்கப் பார்க்கின்றனர்.
அவர்களது தந்திரம் பலிக்காது. இப்படி மற்றவர்களுக்கு நாகரீகம் போதிக்கிற சில நண்பர்கள், தமிழன் என்றால் அவனுக்குகொம்பு முளைத்திருக்கிறதா என்று ஒரு அம்மையார் பேசியது பற்றி கவலைப்படவில்லையே.
ஒருவேளை தமிழனுக்குத் தான் அது பற்றி கோபம் வர வேண்டும் என்று விட்டுவிட்டார்களோ என்னவோ?
ஒழுக்கம் தேவையா இல்யாை என்று ஒரு கருத்து மோதல். இதில் பெரியாரை எல்லாம் இழுத்து அவர் ஏதோ கற்பு என்பதேகடுமையான விரோதி என்று கூறியது போல காட்ட முயற்சிக்கிறார்கள். இவர்கள் பெரியார் சொன்னது எல்லாவற்றையும், கடவுள்பிரச்சனை உள்பட, பிள்ளையார் உடைப்பு உள்பட, அனைத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் போலக் காட்டிக் கொள்வது தான்வேடிக்கையாக உள்ளது.
பெரியார் பேச்சின் பாணி, அவர் தனது கருத்துக்குத் தரும் அழுத்தம், இதையெல்லாம் உணராதவர்கள் தான் பெரியார் கற்புக்கேபகைவர் என்ற ஒரு கூற்றினை கற்பிக்க முனைகிறார்கள்.
பெண்களுக்கு கற்பை வலியுறுத்துகிற ஆண்களும் கற்புடையவர்களாக இருக்க வேண்டும் என்று பெரியார் கூறியதைத் திரித்துஆண்களைப் போலவே பெண்களும் கற்பு குறித்து கவலைப்படக் கூடாது என்று பெரியாது சொன்னதாக திரும்பத் திரும்பப்பேசுவதும், எழுதுவதும் பெரியாரை உணராதவர்களின் பிதற்றலே ஆகும்.
திருமணங்களுக்குத் தலைமை வகிக்கும்போது கூட பெரியார், மணமக்களை வாழ்த்திவிட்டு, அதே நேரம் கல்யாணம் என்பதுபிள்ளை பெறும் வேலை என்று கூறித்தான் கண்டிப்பார். அதற்காக, கல்யாணமே செய்யக் கூடாது என்று பொருளல்ல. ஒரு ஆணும்பெண்ணும் பிள்ளை பெரும் வேலையை மட்டும் செய்யாமல் நாட்டுக்குத் தேவையான நற்பணிகளிலும் ஈடுபட வேண்டும்.
அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அடிமைகளாக இல்லாமல் நண்பர்களாகவும் விளங்கிட வேண்டும் என்பதே தந்தை பெரியாரின்பொருள் விளக்கம்.
இந்த மாதிரிப் பிரச்சனைகளில் கருத்து வேறுபாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் விவாதிக்கலாம்.
தமிழனுக்கு கொம்பு முளைத்திருகிறதா என்பது போன்ற வன்முறையைத் தூண்டிவிடும் தாக்குதல்கள் தரமானவை தானா என்பதைஅவர்கள் தங்கள் மனதுக்குள்ளாவது கேட்டுப் பார்த்துக் கொண்டால் நல்லது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications