மதுரை மாநகராட்சி: அதிமுக, திமுக கவுன்சிலர்கள் மோதல்
மதுரை:
மதுரை மாநகராட்சியில் அதிமுக, திமுக கவுன்சிலர்களுக்கு இடையே பெரும் மோதல் நடந்தது.
இன்று காலை மாநகராட்சி கூடியதும், கார் விபத்தில் பலியான பாஜக கவுன்சிலர் பாண்டீஸ்வரிக்கு அஞ்சரி செலுத்தப்பட்டது.இதையடுத்து அதிமுக கவுன்சிலர் ஜெயபால் எழுந்து, பாண்டீஸ்வரி இறந்த விவகாரத்தைக் கிளப்பினார்.(ஏற்கனவே திருமணமாகி குழந்தையுடன் இருந்த பாண்டீஸ்வரியுடன் காரில் ஜாலியாக ஊர் சுற்றினார் திமுக மேயர்செ.ராமச்சந்திரன். அப்போது ஏற்பட்ட விபத்தில் பாண்டீஸ்வரி இறந்தார்)
பாண்டீஸ்வரி பயணம் செய்த கார் மேயருடையது. காரை ஓட்டியதும் அவர் தான். எனவே அவர் மீது போலீசார் வழக்குப்போட்டுள்ளனர். தலைமறைவான மேயர் பிடிபட்டு ஜாமீனில் வந்துள்ளார். அந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்என்றார் ஜெயபால்.
இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அதிமுக-திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, இந்த விவகாரத்திற்கு ஆணையாளர் பொறுப்பு கூறுவார் என்றார். உடனே எழுந்த ஆணையாளர் பொறுப்பில் உள்ளதுணை ஆணையர் ராஜாமணி, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் இங்கு அது குறித்து விவாதிக்க முடியாது என்றார்.
ஆனால், மேயர் இந்த விபத்துக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என அதிமுக கவுன்சிலர்கள் கோரினர்.
அப்போது எழுந்த ஜெகஜால மேயர் செ.ராமச்சந்திரன், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதைப் பேசக் கூடாது என்றார்.
இதனால் மீண்டும் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பேசிய சில திமுக கவுன்சிலர்கள், மேயர் மீதான வழக்கை இங்கு விவாதிக்கலாம் என்றால் முதல்வர் ஜெயலலிதா மீதானவழக்குகளையும் இங்கு விவாதிக்க வேண்டும் என்றார். அதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே பெரும் கூச்சல்நிலவியது.
இதையடுத்து அவையை ஒத்தி வைப்பதாகக் கூறி மேயர் எஸ்கேப் ஆனார். ஆனால், அவரை நோக்கி அதிமுக கவுன்சிலர்கள்பாய்ந்து சென்றனர். அவரைப் போக விடாமல் தடுக்க முயன்றனர். ஆனால், அதிமுகவினரை திமுக கவுன்சிலர்கள் மேயரைநெருக்க விடாமல் தடுத்தனர்.
ஒருவருக்கு ஒருவர் சட்டையைப் பிடித்து இழுத்துக் கொண்டனர். தள்ளுமுள்ளும் நடந்தது. இதையடுத்து அவையை 10 நிமிடம்ஒத்தி வைத்துவிட்டுத் திரும்ப வந்த மேயர், கூட்டம் நிறைவடைந்ததாகக் கூறிவிட்டு வெளியேறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications