வெள்ளத்தை பார்வையிட பிரதமரை அழைக்க வேண்டும்: ராமதாஸ்
சென்னை:
தமிழ்நாட்டில் நிதியை பெருக்க சாராய ஆலைகள், 5 நட்சத்திர ஹோட்டல்கள், ஆம்னி பஸ்களுக்கு அவசர வரி விதிக்கவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முறையான நிவாரணம் வழங்க வேண்டும், நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சிகொண்ட குழு அமைத்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமக சார்பில் சென்னை சேப்பாக்கத்தில்ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து ராமதாஸ் பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதைப் பார்வையிட முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கை அழைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
பிரதமரே முன் வந்து தமிழ்நாட்டு வெள்ள நிலவரங்களை கேட்டு இருக்கிறார். முதல் கட்டமாக ரூ. 500 கோடி நிதியும்வழங்கியிருக்கிறார். அக்டோபர், நவம்பர் மாதம் மழைக் காலம் ஆகையால் நிவாரண உதவி வழங்க ரூ. 100 கோடியாவதுதமிழக அரசு ஒதுக்கி வைத்திருக்க வேண்டும்.
தற்போது மத்திய அரசு வழங்கி இருக்கும் நிதியில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அனைத்துக் கட்சிகளையும் கொண்ட குழுஅமைக்க வேண்டும்.
சென்னையில் வழங்கப்பட்டது போல் மற்ற பகுதிகளுக்கும் ரூ. 2,000 நிவாரண நிதி வழங்க வேண்டும். வீடுகளைஇழந்தவர்களுக்கு ரூ. 20,000, விளை நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 10,000 நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நிதியை பெருக்க சாராய ஆலைகள், 5 நட்சத்திர ஹோட்டல்கள், ஆம்னி பஸ்களுக்கு அவசர வரி விதிக்கவேண்டும் என்று பேசினார்.
இதை தொடர்ந்து ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 25 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருந்து வருகிறேன். நான் என்ன குற்றம் செய்தேன். எந்த வகையில் என்னால்கருத்து சுதந்திரம் பறி போகிறது. தமிழ் மொழி போராட்டம், கலாச்சார சீரழிவு உள்ளிட்ட எந்த போராட்டத்தை நடத்தினாலும்என்னை வைத்து குத்துவது என்?
குஷ்பு, சுஹாசினி கூறிய கருத்துக்கு எதிராக செருப்பு, துடைப்பம் வீச்சு நடந்தது தற்செயலான சம்பவங்கள். இதை நாங்கள்நியாயப்படுத்தவும் இல்லை. ஆனால் மணி சங்கர் அய்யருக்கு எதிராக நடந்த போராட்டத்தை யாரும் கண்டு கொள்ளாதது ஏன்?கருத்து சுதந்திர விஷயத்தில் இரட்டை அளவு கோல் நியாயமா?
முற்போக்கு முகமூடி போட்டு வந்து இருப்பவர்கள் தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு என்று ஒன்றும் இல்லை என்கிறார்கள். எனதுமகன் அன்புமணியின் செயல்பாடுகளை பிரதமர், சபாநாயகர், அமெரிக்க அமைச்சர் ஆகியோர் பாராட்டி இருக்கிறார்கள்.இதையெல்லாம் இங்குள்ள சிலர் ஒரு சில வரி கூட எழுதவில்லை. இது ஏன்? என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications