வோல்கர் அறிக்கை ஆவணங்களை வெளியிட சு. சுவாமி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எண்ணைக்கு உணவு திட்ட ஊழல் தொடர்பான வோல்கர் அறிக்கையையும், அதனால் பயனடைந்த இந்தியர்கள் பற்றியவிவரங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று ஜனதா தள கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுப்பிரமணிய சுவாமி நிருபர்களிடம் கூறியதாவது:

எண்ணைக்கு உணவு திட்ட ஊழல் தொடர்பாக ஈராக்கின் முன்னாள் அதிபர் எழுதிய கடிதம் உள்பட 1000 பக்கங்கள் அடங்கியவோல்கர் அறிக்கையை பாராளுமன்றத்தில் பட்டியலிட்டு வெளியிட வேண்டும்.

வோல்கர் விவகாரம் தொடர்பாக பாஜக எழுப்பிய பிரச்சினைக்கு எங்கள் கட்சி ஆதரவு தெரிவிக்கும். இந்த ஊழல் தொடர்பாகமுதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மேலும் இந்த ஊழலில் பயனடைந்தவர்களிடம்விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நான் நாளை 2 வாரகால பயணமாக அமெரிக்கா செல்கிறேன். அங்கு வோல்கர் அறிக்கை தொடர்பாக விசாரணைநடத்தவுள்ளேன். இதில் மேலும் பல ஆதாரங்கள் கிடைக்கும் என நம்புகிறேன் என்றார் சுவாமி.

தொடர்ந்து திருமணத்திற்கு முன்பே உறவு வைத்துக் கொள்வது பற்றி குஷ்பு சொன்ன கருத்தை பற்றி அவரிடம் கேட்டதற்கு,அதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார். மேலும் அது அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+