மூழ்கிய கிராமங்கள்.. பட்டினி, அகதி வாழ்க்கை: கடலூரில் மத்திய குழுவை அதிர வைத்த நிஜம்
கடலூர்:
![]() |
மத்திய அரசின் உள்துறை இணை செயலாளர் டி.எஸ்.மிஸ்ரா மற்றும் புகையிலை வளர்ச்சி கழகத்தின் இயக்குனர் (பொறுப்பு)டாக்டர் மனோகரன் ஆகியோர் சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெய்வேலி வந்தனர். அவர்களுடன் தமிழக அரசின்பிரதிநிதியாக நில நிர்வாக ஆணையர் டாக்டர் ஆதிசேஷய்யாவும் உடன் வந்தார்.
பிறகு வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடலூர், சேத்தியாதோப்பு இடையே உள்ள மருவாய் கிராமத்தையும், இதைதொடர்ந்து குறிஞ்சிப்பாடி தென்புறம் உள்ள கிராமங்களான கல்குணம், எல்லைக்குடி உள்ளிட்ட பல்வேறு கிாமங்களை நேரில்பார்வையிட்டனர்.
இதையடுத்து புவனகிரி, கீரப்பாளையம், சேத்தியாதோப்பு, சித்தவிளாகம், சிதம்பரம் ஆகிய பகுதிகளை மத்திய குழுவினர்பார்வையிட்டனர். வழி நெடுகிலும் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கும் விவசாய நிலங்களையும், இன்னும் வெள்ள நீர் வடியாமல்மூழ்கி கிடக்கும் கிராமங்களையும், வெள்ளத்தில் இடிந்து நொறுங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான குடிசைகளையும், ஆறுகளில்ஏற்பட்டுள்ள உடைப்புகள், துண்டிக்கப்பட்ட சாலைகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
வெள்ளத்தில் அனைத்தையும் பறி கொடுத்துவிட்டு கட்டிய துணியோடு அடுத்த வேளை உணவுக்காக அகதிகளைப் போல சாலைநெடுகிலும் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களை நேரில் சந்தித்தனர். அவர்களுக்கு மத்திய குழுவினர் ஆறுதல் கூறினர்.மிக கடுமையான சேதங்களை பார்த்து மத்திய குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இவர்களுடன் சென்ற மாவட்ட கலெக்டர்ககன்தீப்சிங்பேடி எந்தெந்த வகைகளில் சேதம் ஏற்பட்டது என்று அவர்களுக்கு விளக்கினார்.சிதம்பரத்தில் இருந்து புறப்பட்டு இன்று மாலை சிவாயம், திருநாரையூர் பகுதிகளை பார்வையிடுகின்றனர். மீண்டும் நாளைகாலை விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிடுகின்றனர்.
கடலூர் மாவட்ட வெள்ள சேதங்கள் குறித்து மத்திய குழு தலைவர் மிஸ்ரா கூறியதாவது:
கடலூர் மாவட்டம் வெள்ளத்தால் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய பயிர்கள், குடிசைகள், சாலைபோக்குவரத்து போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெள்ளம் பாதித்த மாவட்டங்களை பார்வையிட்டபிறகு எங்களது அறிக்கையை மத்திய அரசிடம் அளிக்கவுள்ளோம் என்றார்.
திருச்சி மாவட்டம்:
திருச்சியில் மத்திய திட்டக்குழு இயக்குனர் கணபதி தலைமையிலான மத்திய குழு வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டனர்.திருச்சியின் வேம்பூர் பகுதியில் மத்திய திட்டக்குழு இயக்குனர் கணபதி, ஊரகத்துறை மேம்பாட்டுத்துறை இயக்குனர் சரோகா,தமிழக தொழில்துறை செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட மத்திய குழுவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைபார்வையிட்டனர்.



Click it and Unblock the Notifications
