பிரதமருடன் வைகோ சந்திப்பு: ரூ. 3,000 கோடி நிதி கோரினார்
சென்னை:
வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு கேட்ட ரூ. 3,000 கோடி ரூபாயை அளிக்க வேண்டும் என்று பிரதமரை வைகோகேட்டுக் கொண்டார். வெள்ள நிவாரணத்துக்குத் தேவையான தொகையை மத்திய அரசு வழங்கும் என்று வைகோவிடம் பிரதமர்மன்மோகன் சிங் உறுதி அளித்தார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில்ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் வைகோ தெரிவித்தார். பின்னர் கோரிக்கை மனு ஒன்றையும் பிரதமரிடம்வைகோ கொடுத்தார்.அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழக மக்களின் அவல நிலையை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். இந்த பேரழிவு லட்சக்கணக்கானவர்களை வீடு இழக்கச் செய்து விட்டது. மீட்புப் பணிகளும் திருப்திகராகநடக்கவில்லை.
போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டதால் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. லட்சக்கணக்கான விளைநிலங்கள், விவசாயத்துக்கு தகுதியற்றதாக ஆகிவிட்டது. எனவே, தமிழக மக்கள் இப்போது மத்திய, மாநில அரசுகளின்உதவிக்காக ஏங்குகிறார்கள்.
இந்த நிலையில் மழை வெள்ளத்தால் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வீடு இழந்து தவிக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர்உயிரிழந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நான் நேரில் சென்று பார்த்த போது சாலைகள், தண்டவாளங்கள்துண்டிக்கப்பட்டு இருந்தன. இது சேதம் தேசிய பேரழிவாகும்.
மத்திய அரசு உடனடி நிவாரண பணிகளுக்காக ரூ. 500 கோடி ரூபாய் அளித்ததற்கு நன்றி கூறிக் கொள்கிறேன். தமிழக அரசுகேட்பது போல் தற்போது அதிக நிதி தேவைப்படுகிறது. எனவே, தமிழக அரசு கேட்டுக் கொண்ட நிதியை தேசியப் பேரழிவுநிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கான நிவாரணத்துக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தொகையைமத்திய அரசு வழங்க வேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications