நாளை கரையை கடக்கும் புயல்: கடலூர், நாகை தப்பின- சென்னை- ஆந்திராவுக்கு அபாயம்
சென்னை:
அந்தமான் அருகே உருவான புயல் சின்னம் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்னைக்கும், ஆந்திர மாநிலம்மசூலிப்பட்டினத்திற்கும் இடையே நாளை பிற்பகலில் காலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![]() |
திசை மாறிவிட்ட இந்தப் புயலால் கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு புயல் அபாயம்நீங்கிவிட்டதாக நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும் தெற்கு ஆந்திர மாவட்டங்களையும் இந்தப் புயல் நாளைதாக்கவுள்ளது. இதையடுத்து இந்த மாவட்டங்களில் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று நிருபர்களிடம் கூறுகையில், இப்போது தமிழக-ஆந்திரகடலோரத்தில் இருந்து 450 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ள இந்தப் புயல் இப்போது நிலையாக ஒரே இடத்தில் நிற்கிறது.
அது நகர்தால், மேற்கு வட மேற்காக நகரும். நாளை பிற்பகலில் சென்னைக்கும் மசூலிப்பட்டிணத்துக்கும் இடையே கரையைக்கடக்கும். அப்போது மணிக்கு 80 கி.மீ. முதல் 90 கி.மீ. வரை கடும் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்யும்.
சென்னை உட்ளிட்ட வட தமிழகம் தவிர புதுவை, தெற்கு ஆந்திரா, கேரளா, லட்சத்தீவு, கர்நாடகத்தின் உட்புற பகுதிகளிலும்அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை பெய்யும்.
அதே நேரத்தில் புயல் அபாயம் நீங்கிவிட்ட கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் மிக லேசானமழையே பெய்யும்.
சென்னையில் இன்றிரவு முதலே மழை ஆரம்பித்துவிடும் என்றார்.
இதற்கிடையே தமிழகத்தின் வட பகுதி துறைமுகங்களில் 2ம் எண் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. கடல் மிகவும்கொந்தளிப்பாக இருப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே ஆந்திராவில் தென் கடலோரப் பகுதிகளில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications