கூடுதல் மண்ணெண்ணெய்: பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை:
தமிழகத்துக்கு கூடுதலாக 43,200 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்எழுதியுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு வழங்குவதற்காக இந்த மண்ணெண்ணெயை கோருவதாக அவர் கூறியுள்ளார்.மன்மோகன் சிங்குக்கு அவர் இன்று அனுப்பியுள்ள கடிதத்தில்,
தமிழகத்துக்கு டிசம்பர் மாதத்துக்கு 59,839 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
சமீபத்தில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக விறகு, சாணம் (விராட்டி) உள்ளிட்ட காய்ந்த எரிபொருட்களைப்பயன்படுத்த இயலாத நிலைக்கு கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒரே மாற்று எரிபொருள் மண்ணெண்ணெய்தான்.
சமையலுக்கும், மின் வசதிக்கும் மண்ணெண்ணையையே மக்கள் நம்பியுள்ளனர். சமையல் கேசுக்கு வேறு தட்டுப்பாடுநிலவுவதால் மண்ணெண்ணெய்யின் தேவை பல மடங்காகிவிட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மண்ணெண்ணெய் கிடைக்கச் செய்ய வேண்டிய நிலையில் அரசு உள்ளது. தமிழகத்தில்உள்ள அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் கூடுதலாக தலா 3 லிட்டர் வழங்க வேண்டுமானால் எங்களுக்கு இந்த மாதம் 43,200கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் கூடுதலாகத் தேவை.
மாநிலத்தில் உள்ள அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் மண்ணெண்ணெய் வழங்க தமிழகத்துக்கு 1 லட்சம் கிலோ லிட்டர் தேவை.இது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கைகளை எல்லாம் நிராகரித்துவிட்டு டிசம்பர் மாதத்துக்கு 59,839 கிலோ லிட்டர் தான்ஒதுக்கியுள்ளீர்கள்.
இதனால் ஒதுக்கப்பட்ட மண்ணெண்ணெயோடு கூடுதலாக 43,200 கிலோ லிட்டர் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications