வருது தேர்தல்: திமுக தொண்டர்களை தயார் செய்யும் ஸ்டாலின்
திருவண்ணாமலை:
வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி மாவட்டச் சுற்றுப் பயணம் ஆரம்பித்துள்ள ஸ்டாலின் கட்சியினரைச் சந்தித்து பூத் கமிட்டிஅமைப்பது, அதற்கான நிதி பட்டுவாடா ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
மேலும் மாவட்ட, ஒன்றிய அளவில் கட்சியில் நிலவும் உள்ள கோஷ்டிப் பூசல்களைத் தீர்த்து வைத்து, தேர்தல் பணிக்குகட்சியினரைத் தயார் செய்து வருகிறார். ஸ்டாலின் வந்து போன மாவட்டங்களில் எல்லாம் திமுகவினர் சுறுசுறுப்பாகஆரம்பித்துவிட்டனர்.இந் நிலையில் திருவண்ணாமலை வந்த ஸ்டாலின் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசினார். கீழ்பென்னத்தூரில் நடந்த இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நீங்கள் அனைத்தும் அறிந்தவர்கள் அதனால் உங்களுக்கு எதுவும் எடுத்துத் சொல்ல தேவையில்லை. இது திமுக கோட்டை என்றுதெரியும். அதனால் அறிவுரை, ஆலோசனை கூற தேவையில்லை.
தேர்தலுக்கு 6 மாதம் முன்பே செயல் வீரர்கள் கூட்டம் நடக்கிறது என்றால், வரும் தேர்தலில் தற்போது நடைபெறும் ஆட்சிக்குமுற்றுப்புள்ளி வைப்பதற்கு நாம் தயாராகிவிட்டோம் என்பது அனைவருக்கும் புரியும்.
கருணாநிதி ஆட்சியினை வரவேற்க, கழகம் ஆட்சிப் பொறுப்பேற்க, நாம் சபதம் எடுப்போம். இதில் வேறுபாடு கருத்துக்கள்இல்லை. தமிழ் மக்கள் தயாராக உள்ளனர். நாம் பதவிக்காக குரல் தரவில்லை. கலைஞர் பார்க்காத பதவியில்லை. கலைஞர்இதுவரை ஒருமுறை கூட தோற்றது இல்லை.
அவர் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றுள்ளார். சாதனை படைத்துள்ளார்.
இன்னும் 6 மாதத்தில் தேர்தல் வர உள்ள நிலையில் திமுக ஆட்சியினை மக்கள் எதிர்பார்க்கின்றனர். நாங்கள் பணியாற்றிட நீங்கள்தரும் உத்தரவு தான் பதவி.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications