கேப்டன் வந்தார்.. உதவினார்.. திட்டினார்.. கிளம்பினார்
திருச்சி:
![]() |
திருச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட தேசிய திராவிட முற்போக்குக் கழகத்தின் தலைவர்விஜய்காந்த் ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள உதவிகளை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழக மக்களிடம் ஓட்டு வாங்கி ஜெயித்த எம்பி, எம்எல்ஏக்கள் கட்சி பாகுபாடின்றி மக்களுக்கு நிவாரணம் வாங்கித் தரவேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அதிகமான நிவாரண நிதியைப் பெற்றுத் தர வேண்டும்.
தமிழக அரசும் விவசாயிகளுக்கு கடன், உதவி, உரம் ஆகியவற்றை வழங்கி, அவர்கள் கந்து வட்டிக்காரர்கள் சிக்காமல் காப்பாற்றவேண்டும்.
கர்நாடகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது ரூ. 4,000 கோடி வழங்கிய மத்திய அரசு தமிழகத்துக்கு வெறும் ரூ. 500 கோடிதந்துள்ளது. இது ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பை வைக்கும் செயல். இந்த பாரபட்சத்தை எதிர்த்துதமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் குரல் தர வேண்டும்.
வெள்ள நிவாரணத்துக்காக கலை நிகழ்ச்சி நடத்தி அதில் கிடைக்கும் நிதியை மாநில அரசிடம் தர நடிகர் சங்கம் தயார்.
நிவாரணம் வழங்கும் விஷயத்தில் அரசியல் கூடாது. நிவாரணம் வழங்க மாவட்ட அளவில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தகுழுக்களை அமைக்க வேண்டும் என்று திமுக கூறியுள்ளது. நல்லது நடக்குமானால் குழு அமைப்பதில் தவறில்லை. ஆனால்,இதை அரசியலாக்குவது முட்டாள் தனம், அநாகரீகம்.
கட்சி ஆரம்பித்து பல மாதம் ஆனாலும் பரபரப்பாக எதையும் செய்யவில்லை என்கின்றனர். நான் கருணாநிதி, ஜெயலலிதாமாதிரி பரபரப்பு அரசியல் செய்ய விரும்பவில்லை. தேவையில்லாத அறிக்கைகள், போராட்டங்களை தவிர்த்து வருகிறேன்.
பேனர் கிழிப்பது, தார் பூசுவது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டாம் என்று தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.இளைஞர்களை எப்படி வழி நடத்த வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றார் விஜய்காந்த்.
இதற்கிடையே திருச்சி எடமலைப்பட்டிப் புதூரில் விஜய்காந்த் வந்த வாகனத்தை பொது மக்கள் வழிமறித்து பாதிக்கப்பட்டதங்களது பகுதியைப் பார்க்க வருமாறு கூறினர்.அப்போது சினிமாவில் மன்சூர் அலிகானை பார்த்த விஜய்காந்த் மாதிரி அநியாயத்துக்கு அவசியமே இல்லாமல் டென்சன் ஆனார்கேப்டன்.
தனது வழக்கமான அடிக்குரலில், உங்ககிட்ட ஓட்டு வாங்கிட்டுப் போன எம்.பி, எம்எல்ஏ, அமைச்சர்களை வரவழைத்துக்காட்டுங்கள். நான் தனி நபர். நான் அரசாங்கம் கிடையாது என்று சீறிவிட்டுக் கிளம்பினார்.
இவர் எதுக்கு வந்தார், எதுக்கு திட்டினார் என்றே தெரியாமல் மக்கள் விழித்தனர்.
அதே நேரத்தில் விஜய்காந்தின் கட்சியின் சார்பில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், கட்சித் தொண்டர்கள் பாதிக்கப்பட்டபகுதிகளில் நிவாரண உதவிகளைச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications