திண்டிவனம்: அதிமுக கிண்டும் அரசியல் அல்வா!
சென்னை:
காங்கிரசில் வன்னியர்களுக்கு அதிக பதவிகள் தர வேண்டும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமைய வேண்டும் என்றகோரிக்கையோடு திமுக தலைவர் கருணாநிதியையும் தாக்கி வரும் மூத்த காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்திக்கு அக்கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விரைவில் அவர் கட்சியை விட்டுத் தூக்கப்படுவார் என்று தெரிகிறது.தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை கருணாநிதி கட்டுப்படுத்தி வருவதாகப் புகார் கூறிய ராமமூர்த்தி, திடீரென ஜெயா டிவியில்அளித்த பேட்டியில் திமுகவை மறைமுகமாக சாடினார். முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளைப் பாராட்டினார்.
இதையடுத்து தனது வன்னிய சமுதாயத்தினரைத் சேர்ந்த சில காங்கிரஸ் தலைவர்களை ஒன்று கூட்டி தனிக் கூட்டம் போட்டார்.அதில் காங்கிரசில் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்றும் கட்சியின் முக்கிய பதவிகளை பிற ஜாதியினரேஆக்கிரமித்து இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் சீட்களை காங்கிரசுக்கு திமுக விட்டுத் தர வேண்டும் என்றார்.
தேசியக் கட்சியான காங்கிரசில் திண்டிவனம் ராமமூர்த்தியின் ஜாதிப் பேச்சால் பெரும் உரசல் உருவானது. ஜாதிகளைத் தாண்டியதுகாங்கிரஸ் கட்சி என்று பதில் தந்தார் ஜி.கே. வாசன்.
இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதியைத் தாக்க ஆரம்பித்தார் திண்டிவனம். தமிழக காங்கிரஸ் கட்சியை திமுக அடிமையாகவைத்திருப்பதாகவும், காங்கிரஸ் போராட்டங்களைக் கூட திமுக தான் முடிவு செய்வதாகவும் கூறினார்.
மேலும் இளைஞர் காங்கிரஸ் நடத்தவுள்ள ஒரு போராட்டத்தை திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் தொடங்கிவைப்பதற்கும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
பாமகவுக்குப் போட்டியாக வன்னியர்களுக்காக தனி அமைப்புத் தொடங்கும் திட்டத்தில் உள்ள திண்டிவனத்துக்கு அதிமுக தான்பின்னணியில் இருப்பதாகக் கருதப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலில் தனது கூட்டணிக்கு வர பாமக, காங்கிரசுக்கு முதல்வர்ஜெயலலிதா விரித்த வலைக்கு பலன் கிடைக்கவில்லை.
இதையடுத்து மதிமுகவுடனும் பேச்சு நடத்த முயற்சி நடந்தது. அதை வைகோ ஆரம்பத்திலேயே தவிர்த்துவிட்டார்.
இந் நிலையில் கட்சிகளை உடைக்கும் வேலைகளில் அதிமுக இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் எதிரொலியாகவேதிண்டிவனத்தைத் தூண்டிவிட்டு காங்கிரசை உடைக்கவும், அதே நேரத்தில் பாமகவுக்கு எதிராக ஒரு வன்னிய அமைப்பைஉருவாக்கவும் அதிமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த விவரங்கள் காங்கிரஸ் மத்திய தலைமைக்கு ஜி.கே.வாசனால் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து திண்டிவனத்தின்செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பி அவருக்கு கட்சி மேலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.விரைவில் அவர் கட்டம் கட்டப்பட்டு கட்சியிலிருந்து தூக்கப்படுவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே தன் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக ஆர்வத்தோடு காத்துக் கொண்டுள்ளார் திண்டிவனம்ராமமூர்த்தி.
ான் நீக்கப்பட்டால், காங்கிரசில் அதிருப்தியில் உள்ள வன்னியர்களைத் திரட்டி தனி அமைப்பைத் தொடங்குவதில் தீவிரமாகஇருக்கும் அவர் விரைவில் சேலம், விழுப்புரம், கடலூர், வேலூர் மாவட்டங்களில் தனக்கு ஆதரவாளர்களைத் திரட்டிக்கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications