ஆந்திரா- சென்னை இடையே சனிக்கிழமை கரை கடக்கும் புயல்
சென்னை:
![]() |
அதே நேரத்தில் இந்தப் புயலால் தமிழகத்துக்கு ஏற்பட்ட அபாயம் நீங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை முதல் சென்னையிலிருந்து தென் கிழக்கே 400 கி.மீ. தொலைவில் இந்தப் புயல் சின்னம் நிலையாக நின்றுகொண்டுள்ளது. அது இப்போது மேலும் வலுவடைந்து மிக மெதுவாக ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி முன்னேறிவருகிறது.
இதனால் சென்னை- மசூலிப்பட்டிணத்துக்கு இடையே ஆந்திரக் கரையில் இந்தப் புயல் சனிக்கிழமை காலை கரையைக் கடக்கும்என்று தெரிகிறது. ஆனால், இன்று இரவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றும் கனமழையும் தொடங்கிவிடும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன் இயக்குனர் ரமணன் கூறுகையில், தமிழகத்துக்கு புயல் ஆபத்து நீங்கிவிட்டாலும், சென்னை உள்ளிட்ட மூன்று வடமாவட்டங்களிலும் மிக பலத்த காற்றுடன் இன்று இரவு முதல் கன மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இந்த மாவட்ட கடலோரப்பகுதிகளில் மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசும்.
கடலில் சீற்றம் மிக அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
மற்ற மத்தியப் பகுதி மாவட்ட கடலோரப் பகுதிகளான கடலூர், நாகை, தஞ்சை ஆகியவற்றில் லேசான மழை பெய்யும். மணிக்கு50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.
2001ம் ஆண்டுக்குப் பின் தமிழகத்தை புயல் ஏதும் தாக்கவில்லை. இருந்தாலும் நாம் கவனமாக இருப்பதே நல்லது. இந்த புயல்சின்னம் வலுவடைந்து, திசை மாறினால் தமிழகத்திலும் மோசமான விளைவுகள் நேரலாம் என்றார்.
இதற்கிடையே புயல் இப்போதுள்ள நிலையில் ஆந்திராவைத் தாக்கவுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளதால் அம் மாநிலம் புயலைச்சமாளிக்க தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. நெல்லூர், கோதாவரி, பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, சித்தூர் மாவட்டங்கள்இந்தப் புயலைச் சமாளிக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்துள்ளன.
மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு இந்த மாவட்டங்களின் ரயில்வே அதிகாரிகளுக்கும்உத்தரவிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications