ஹெலிகாப்டர் உணவு எடுப்பதில் மோதல்-சதக்
கடலூர்:
கடலூர் அருகே ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட உணவுப் பொட்டலங்களை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது.
புதுச்சத்திரம் பகுதியில் வெள்ளத்தால் சூழப்பட்ட ஏராளமான கிராமங்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு போடப்பட்டது. நேற்று முன் தினம் உணவுப் பொட்டலங்கள் போடப்பட்டபோது தங்கமணி (46), பாலமுருகன் (28) ஆகியோருக்கு இடையே பொட்டலங்களை எடுப்பதில் தகராறு ஏற்பட்டது.அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், இருவரும் அடித்துக் கொண்டனர். அப்போது தங்கமணியை பாலமுருகன் கத்தியால் குத்தினார். இதில் தங்கமணிக்கு வலது கையில் குத்து விழுந்தது. காயமடைந்த தங்கமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளப் பகுதிகளில் இன்னும் நிலைமை சீரடையாததால் இப்போது தான் இந்தக் கத்திக் குத்து விவரம் வெளியில் வந்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய ராணுவத்தினர் படகு:
இதற்கிடையே சிதம்பரம் அருகே பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை மீட்டு வரும் ராணுவத்தினரின் படகு ஒன்றுவீரன்கோவில் திட்டு அருகே கடலும்-ஆறும் சேரும் இடத்தில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
அதில் 15 வீரர்கள் இருந்த நிலையில், அந்தப் படகு சுழலில் சிக்கிக் கொண்டது. படகு கவிழும் சூழல் உருவானது. ஆனாலும்வீரர்கள் சாமர்த்தியமாக சமாளித்து கரையை அடைந்தனர். இதனால் சுமார் 1 மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
சிதம்பரம் பகுதிகளில் தொற்று நோய் பரவாமல் இருக்க மருந்துகளை வழங்கி வரும் ராணுவத்தினர். கொட்டமேடு பகுதியில்தாற்காலிக பாலம் அமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
சென்னே-கும்பகோணம் போக்குவரத்து தொடங்கியது:
இதற்கிடையே கடந்த 8 நாட்களாக துண்டிக்கப்பட்டிருந்த வடலூர்-சேத்தியாதோப்பு இடையிலான சாலைப் போக்குவரத்து சாலைசீரமைக்கப்பட்டதையடுத்து இன்று மீண்டும் தொடங்கியது.
வாலாஜா ஏரியில் ஏற்பட்ட உடைப்பாலும், பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் வடலூர் அருகே மருவாய் என்றஇடத்தில் சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
15 அடி தூரத்துக்கு சாலையே காணாமல் போய் பெரிய பள்ளம் தான் இருந்தது. இதனால் சென்னை-கும்பகோணம் போக்குவரத்துமுழுமையாக பாதிக்கப்பட்டது.
இந் நிலையில் வெள்ளம் வற்றியதும் இந்தச் சாலை புயல் வேகத்தில் சீரமைக்கப்பட்டு இன்று முதல் மீண்டும் போக்குவரத்துக்குத்தயாராகிவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications