ஜெவுக்கு எதிராக வாதம்: சம்பளம் கட்
சென்னை:
டான்சி வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, அவரது உ.பி. சகோதரி சசிகலா ஆகியோருக்கு எதிராக வாதாடிய அரசு வழக்கறிஞருக்குதமிழக அரசு இன்னும் சம்பள பாக்கி வைத்துள்ளது.
இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் தருமாறு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை ஜெயலலிதாவும் சசியும் அடிமாட்டு விலைக்கு சுருட்டியது தொடர்பான வழக்கில்இருவருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.அப்போது தமிழக அரசின் சார்பில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு எதிராக வாதாட முன்னாள் அட்வகேட் ஜெனரல் வெங்கடபதியும்,அவருக்குத் துணையாக 6 ஜூனியர்களும் நியமிக்கப்பட்டனர்.இதில் வெங்கடபதிக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 25,000மும் ஜூனியர்களுக்கு தலா ரூ. 8,333மும் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.ஒன்றரை மாதம் இந்த விசாரணை நடந்தது. ஆனால், அவர்களுக்குரிய ஊதியத்தை தமிழக அரசு தராமல் இழுத்தடித்தது.இதையடுத்து சம்பள பாக்கி கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் வெங்கடபதி.
அதை விசாரித்த நீதிமன்றம் வெங்கடபதிக்கும் ஜூனியர்களுக்கும் சம்பளத்தை செட்டில் செய்யுமாறு உத்தரவிட்டது. ஆனால்,கால் பங்கு சம்ளத்தை மட்டும் தந்த தமிழக அரசு மிச்சத்தைத் தராமல் இழுத்தடித்து வருகிறது.
சமீபத்தில் ஒரு அரசாணை வெளியிட்ட தமிழக அரசு, வழக்கறிர்களுக்கு சம்பள பாக்கி ஏதுமில்லை என அறிவித்தது.
இந் நிலையில் நிலுவையில் இருந்த இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ஷா, நீதிபதி பானுமதி ஆகியோர் முன் விசாரணைக்குவந்தது. அப்போது வெங்கடபதியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழ்மணி,
நான்கு ஆண்டுகளாக சம்பள பாக்கியைத் தராமல் அரசு இழுத்தடித்து வந்தது. இப்போது சம்பளம் தர வேண்டியதில்லை என்றுஅரசாணை பிறப்பித்துள்ளார்கள். இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றார்.
இதைத் கேட்ட தலைமை நீதிபதி ஷா, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நேரில் ஆஜராகி இது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்துக்குப் போய் கடும் கண்டனத்துக்குப் பின் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது. நிலத்தைத் திருப்பித் தந்துவிடுவதாக ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்திடம் உத்தரவாதம் தந்ததும்நினைவுகூறத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications