மேலும் ஒரு பஸ் ஆற்றில் கவிழ்ந்தது!
ராமநிாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் சருகணி ஆற்றில் 60க்கும் மேற்பட்ட உயிர்களைப் பழி வாங்கிய பஸ் விபத்து இன்னும் மனதிலிருந்தமறையாத நிலையில் அதே ஆற்றில் இன்று மேலும் ஒரு பேருந்து கவிழ்ந்து சகதியில் சிக்கிக் கொண்டது.
அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்.கடந்த வாரம் தமிழகம் முழுவதையும் விளாசித் தள்ளிய கன மழையால், தொண்டி அருகே சருகணி ஆற்றைக் கடக்க முயன்றபேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
அதில், 60க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக இறந்தனர். அதில் பலரது உடல்கள் கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. அதே நாளில் பட்டுக்கோட்டை அருகேயும் வெள்ளத்தில் சிக்கிய பஸ்சில் 70க்கும் மேற்பட்ட பயணிகள்இறந்தனர்.
இந் நிலையில் அதே சருகணி ஆற்றில், அந்த விபத்து நடந்த பகுதியில் இருந்து 5 கி.மீ. தொலைவில், இன்று காலை ஒரு பேருந்துபாலத்திற்கு அருகே இருந்த சேற்றுப் பகுதியில் சிக்கி ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
அந்தப் பேருந்தில் 16 பயணிகளே இருந்தனர். அதிர்ஷ்டவசமாக அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர். அவர்களில் 2பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications