வெள்ள நிலவரம்: கலாமிடம் விளக்கினார் ஜெ
சென்னை:
தமிழக மழை, வெள்ளச் சேதம் குறித்தும் மாநில அரசு மேற்கொண்டுள்ள நிவாரணப் பணிகள் குறித்தும் குடியரசுத் தலைவர்அப்துல் கலாமை நேரில் சந்தித்து முதல்வர் ஜெயலலிதா விளக்கமளித்தார்.
சென்னை வந்துள்ள கலாமை, இன்று காலை ஆளுநர் மாளிகைக்கு சென்று முதல்வர் ஜெயலலிதா சந்தித்தார். அவருடன்தலைமைச் செயலாளர் நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றிருந்தனர்.தமிழகத்தில், மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், சேத நிலவரம், தமிழக அரசின் நிவாரணப் பணிகள் ஆகியவை குறித்துகலாமிடம் ஜெயலலிதா விளக்கினார். பின்னர் மத்திய அரசிடம் கோரியுள்ள நிவாரண நிதி இன்னும் வந்து சேரவில்லைஎன்பதையும் அவர் தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் 3 முறை ஏற்பட்ட மழை பாதிப்புகளை தமிழக அரசு திறம்பட சமாளித்து, நிவாரணப் பணிகளைமேற்கொண்டுள்ளதாக ஜெயலலிதாவிடம் கலாம் கூறினார்.
தமிழக அரசின் பணிகள், குறிப்பாக கடலூர், நாகப்பட்டனம் மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்கள் ககன்தீப்சிங் பேடி, டாக்டர்ராதாகிருஷ்ணன் ஆகியோரின் நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ள பணிகள் பாராட்டுக்குரியவை என்று கலாம் தெரிவித்தார்.
இச் சந்திப்பின்போது ஆளுனர் பர்னாலாவும் உடன் இருந்தார்.
அண்ணா பல்கலையில் கலாம்:
முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்தில் கலாம் உரையாற்றினார். அவர் கூறுகையில்,
சாப்ட்வேர் துறையையும் தாண்டி வேறு துறைகளிலும் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் கவனம்செலுத்த வேண்டும். குறிப்பாக ஹைட்ராலிக்ஸ், விவசாயப் பொறியியல், நீர் ஆதார மேம்பாடு குறித்த ஆராய்ச்சிகள், கல்விதீவிரமாக்கப்பட வேண்டும்.
இவை அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் திறன் படைத்த பாடப் பிரிவுகள் ஆகும். 2025ம் ஆண்டில் உலகில் 8பில்லியன் மக்கள் தொகை இருக்கும். அப்போது பெரும் அளவில் குடிநீர் பஞ்சம் உருவாகும். அதைச் சமாளிக்க குறைந்தசெலவில் கடல் நீரைக் குடிநீராக்குவது தான் ஒரே வழியாக இருக்கும். அதற்கான ஆய்வுகளை இப்போதே தொடங்க வேண்டும்.
அதே போல நாட்டின் முக்கிய கல்வி நிலையங்கள் அனைத்தும் அதிக டிரான்ஸ்மிசன் சக்தி வாய்ந்த பைபர் கேபிள்களால்இணைக்கப்பட்டு knowledge grid உருவாக்க வேண்டும் என்றார்.
மேலும், வரும் 2007ம் ஆண்டில் பல நாடுகள் இணைந்து இளைஞர்களுக்காக தனியாக ஒரு செயற்கைக் கோளை செலுத்தஉள்ளன. அவற்றின் மூலம் உலகம் முழுவதும் இளைஞர்கள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும் என்றார்
இந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தபோது தான் கலாம் ஜனாதிபதியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications