இந்தியா வருகிறார் ராஜபக்ஷே
டெல்லி:
இலங்கையின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மங்கள சமரவீரா, டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார்.
வெளியுறவுத்துறையில் இருந்து நட்வர் சிங் நீக்கப்பட்டதில் இருந்து அந்தத் துறையை மன்மோகன் சிங் தான் கவனித்துவருகிறார். இதனால் சமரவீரா, பிரதமரையும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமதையும் சந்தித்தார்.அப்போது விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்வதில் அதிபர் ராஜபக்ஷே திட்டவட்டமாக இருப்பதாகபிரதமரிடம் சமரவீரா தெரிவித்தார்.
மேலும் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு மீண்டும் வருமாறு புலிகளுக்கு அரசு அழைப்புவிடுத்துள்ளதாகவும், இந்த விஷயத்தில் திறந்த மனதுடன் செயல்பட ராஜபக்ஷே தயாராக இருப்பதாகவும் சமரவீரா கூறினார்.
இலங்கை இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு காண்பதையே இந்தியா ஆதரிப்பதாகவும், இந்தமுயற்சிகளுக்கு முழு ஆதரவும் தருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இச் சந்திப்புக்குப் பின் இரு நாடுகளும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றவகையில், இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளையாத வகையில், ஜனநாயகரீதியில், மனித உரிமைகள் மதிக்கப்படும்வகையில் தீர்வு காணப்பட வேண்டும்.
இலங்கையின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு எந்த சிக்கலும் ஏற்படுவதை இந்தியா விரும்பவில்லை என்றுகூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா வருமாறு இலங்கை அதிபருக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications