தாராபுரம் நகராட்சி பொழிந்த பண மழை
தாராபுரம்:
தாராபுரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்த இருப்பதாக தகவல் பரவியதால் நகராட்சியின் மாடிகளில்இருந்து ஜன்னல் வழியாக லஞ்சப் பணத்தை கட்டுக்கட்டாக பணத்தைத் தூக்கி வீசினர் ஊழலுக்குப் பேர் போன நகராட்சிஊழியர்கள்.
தாராபுரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது.இதையடுத்து நகராட்சியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், அனைத்து துறை அலுவலகங்களிலும் இச்செய்தியை பரப்பினார்.மாறுவேடத்தில் வெளியில் நிற்கும் போலீசார் சில நிமிடங்களுக்குள் நகராட்சி அலவலகத்தின் உள்ளே வர இருப்பதாகவும் அந்தஊழியர் கூறியுள்ளார்.
இதனால் பயந்து போன அலுவலக அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து தங்களிடம் இருந்த லஞ்சப் பணத்தைநகராட்சி மாடியில் உள்ள சில அறைகளின் ஜன்னல் வழியாக வீசியெறிந்தனர். பொறியியல் பிரிவு அறையில் இருந்து தான் அதிகஎண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுக் கட்டுகள் வீசப்பட்டதாக வளாகத்தில் இருந்த கடைநிலை ஊழியர்கள் கூறினர்.
மேலும் இந்த பிரிவில் நின்று கொண்டிருந்த புரோக்கர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
மாடியில் இருந்து வீசப்பட்ட ரூ.10, ரூ.50, ரூ. 100, மற்றும் ரூ.500 நோட்டுகள் அங்கும் இங்கும் பறக்க துவங்கின. அதை கடைநிலை ஊழியர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்கள் பொறுக்கி கொண்டனர்.
இந்த நிலையில் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை புரளிதான் என்பது தெரியவந்ததும் ஊழியர்கள் அந்த பணத்தைஅதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டதாகத் தெரிகிறது.
நகராட்சி அலுவலகத்தில் இருந்து பண மழை கொட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications