தூத்துக்குடி, சென்னையில் கடல் ஆக்ரோஷம்: ஊருக்குள் புகுந்த நீர் !
தூத்துக்குடி:
தூத்துக்குடி, சென்னை கடல் பகுதியில் அலைகள் மிக ஆக்ரோஷமாக உள்ளன. கடலின் மட்டம் திடீரென உயர்ந்து, நீர் இந்தநகர்களின் உட் பகுதிகளுக்குள் நுழைந்துள்ளது.
சுனாமி தாக்குதலுக்குப் பின் தூத்துக்குடி பகுதியில் கடல் உள்வாங்குவதும் வெளிவாங்குவதுமாக அவ்வப்போது பீதியூட்டிவருகிறது.இந் நிலையில் நேற்று காலை முதல் கடலில் சீற்றம் அதிகமாக இருந்தது. நேற்று இரவில் கடற்கரை சாலையில் உள்ள ரோச்பூங்காவுக்குள் 150 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் புகுந்தது.
சிறுவர் பூங்காவுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கடலின் மட்டம் உயர்ந்து காணப்படுவதாக திரேஸ்புரம், இனிகோ நகர் உள்ளிட்டபகுதிகளைச் சேர்ந்தவர்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.
அதே போல சென்னையில் எண்ணூர்-திருவெற்றியூர் பகுதியில் கடல் அலைகள் மீனவர்களின் வீடுகளுக்குள் புகுந்தது. இப்பகுதியில் 200 மீட்டர் அளவுக்கு கடல் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தது.
அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி அருகே முழங்கால் வரை தண்ணீர் தேங்கும் அளவுக்கு கடல் வெளிவாங்கியது. அதே போலஐஸ் ஹவுஸ் அருகே கடற்கரையில் உள்ள உட்புற சாலை அலைகளால் தண்ணீரில் மூழ்கிவிட்டது.
பெசன்ட் நகர், பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம், ஆகிய பகுதிகளிலும் அலைகள் கடலைத் தாண்டி மக்கள் நடமாடும் பகுதிவரை எட்டி வருகின்றன. மெரீனா கடற்கரையில் மணலில் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது.
குமரியில் உள் வாங்கிய கடல்:
இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் கடல் உள் வாங்கி பீதியைக் கிளப்பியுள்ளது. குமரி மாவட்டத்தில்பல இடங்களில் கடல் உள் வாங்கி பாறைகள் வெளியில் தெரிகின்றன.
நேற்று அமாவாசை என்பதால் நிலவின் ஈர்ப்பு சக்தியால் கடலின் மட்டம் உயர்வதும், தாழ்வதும் சாதாரணமானது தான் எனஅதிகாரிகள் கூறுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications