சென்னை முழுவதும் வெள்ளம்: மிதக்கிறது நகரம் வீடுகளுக்குள் தண்ணீர்- படகுகள் மூலம் மீட்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Parriscorner
சென்னையில் நேற்று காலையில் தொடங்கிய கன மழை இன்று காலை வரை நீடித்தது. இதனால் நகரின் பல பகுதிகளும்தண்ணீரில் மிதக்கின்றன.

பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடுவதால் போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது.

புயல் சின்னம் வலுவிழந்த நிலையில் வட தமிழகம் முழுவதும் மழை நீடித்து வருகிறது. அதே நேரத்தில் புயல் அபாயம்நீங்கிவிட்டது.

இன்று காலை வரை (24 மணி நேரத்தில்) சென்னையில் 23 செ.மீ. மழை பெய்துள்ளது. நேற்று இரவு முழுவதும் கன மழைநீடித்தது. இதனால் வேளச்சேரி, சைதாப்பேட்டை, தாம்பரம், மடிப்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, ஆதம்பாக்கம், நங்கநல்லூர்,பேசின் பிரிட்ஜ், புளியந்தோப்பு என நகரின் பல பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

Purasaivakkam
சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய நீர் சுமார் 2 லட்சம் வீடுகளுக்குள் புகுந்துவிட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் மாடிகளிலும் பிற பகுதிகளிலும் உள்ள உறவினர்கள், நண்பர்களின் வீடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.பல குடிசைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. குடிசைப் பகுதி மக்கள் மீட்கப்பட்டு சமுதாயக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.

வேளத்சேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் ரிசர்வ் வங்கி, தி.நகர், தாம்பரம், துரைசாமி பாலம், சைதாப்பேட்டை, பரங்கி மலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் ரயில்பாலங்களுக்கு கீழ் உள்ள சுரங்கப் பாதைகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. அந்தப் பாதைகள் அனைத்தும் முழு அளவில் நீரில்மூழ்கிவிட்டன.

A house flooded with water
நகரின் பல பகுதிகளிலும் சாலைகளில் இடுப்பளவுக்கு மழை நீர் ஓடுவதால் இரு சக்கர வாகனங்களை இயக்க முடியவில்லை.

கார்கள், பஸ்கள், லாரிகளும் கூட ஆங்காங்கே நீர் புகுந்ததால் செயல் இழந்து சாலைகளில் நிற்கின்றன. இதனால் சென்னைமுழுவதுமே போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது.

கிண்டியில் வண்டிக்காரன் தெரு சாலை நீரில் மூழ்கிவிட்டதால் புற நகர்களில் இருந்து சென்னைக்கு வரும் பாதை முழுவதுமாகதுண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் மடிப்பாக்கம்-வேளச்சேரி சாலையில் பல கிமீ தூரத்துக்கு மழை நீர் வெள்ளமாகத் தேங்கிக் கிடக்கிறது.

Egmore
இதைத் தவிர சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு ஏரிகள், குளங்களும் நிரம்பி அந்த நீரும் நகரின் பல்வேறு பகுதிகளுக்குள்புகுந்து வருகிறது.

முன்னெச்சரிக்கையாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுவிட்டதால் சென்னையில் பல பகுதிகளில் மின்சாரமும் இல்லை.

கூவம் ஆற்றில் கழிவு நீரை அடித்துக் கொண்டு பெரும் அளவில் வெள்ளம் ஓடுகிறது. இதனால் கரையோரத்தில் இருந்தகுடிசைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

சுமார் 2 நாட்களாக விடாமல் பெய்த மழை இன்று காலை 5 மணிக்குத் தான் நின்றது. இதனால் மக்கள் லேசான நிம்மதிப் பெருமூச்சுவிட்டு வருகின்றனர்.

இடி தாக்கி தீ விபத்து:

இதற்கிடையே சென்னையையடுத்த திருவேற்காட்டில் இடி தாக்கியதால் கிடங்கு ஒன்றில் தீப் பற்றிக் கொண்டது.

தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பால் நிறுவனத்தின் கிடங்கில் இந்த விபத்து ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+