புயல், பேரழிவுக்கு சுனாமி பூகம்பமே காரணம்
சென்னை:
தொடர்ந்து புயல் சின்னம் ஏற்படுவதற்கு சுனாமி தாக்குதலை ஏற்படுத்திய மாபெரும் பூகம்பமே காரணம் என்று நிபுணர் ஒருவர்தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் அடுத்தடுத்து புயல் உருவாகி தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து பெரும் வெள்ளச் சேதத்தைஉருவாக்கியது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக காய்ந்து கிடந்த ஓடை, வாய்க்கால்கள், பெயரை கேள்விப்பட்டிராத சிற்றாறுகளில்எல்லாம் வெள்ளம். மழையையே அதிகம் பார்த்திராத சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மழை வெள்ளம்.சென்னை நகரில் ஒரு மாதத்துக்கு மேலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வழக்கத்துக்கு மாறாக சென்னையில் குளிர்வாட்டுகிறது. பருவ நிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஆனால் இவற்றுக்கெல்லாம் கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி சுனாமியை உருவாக்கிய பூகம்பமே காரணம் என்று பிரபல பூகம்பநிபுணரும், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி பேராசிரியருமான மணிமாறன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள மேலும்அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வருமாறு:
தமிழகத்தில் சமீபத்தில் அபரிதமான மழை பெய்ததற்கு காரணம் சுனாமி தாக்குதல் தான். இது மட்டுமல்ல, அமெரிக்காவில்ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி சேதத்தை விளைவித்து அந்த நாட்டையே கதிகலங்க செய்த ரீட்டா, காத்ரீனாபோன்ற புயல்களுக்கும், மும்பை நகரை மிதக்க விட்ட பேய் மழைக்கும் காரணம் சுனாமி தான்.
கடந்த டிசம்பர் 26ம் தேதி சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்குள் ஏற்பட்ட பெரிய பூகம்பமானது, ஹிரோஷிமாவில் போடப்பட்டஅணுகுண்டு மாதிரி 9 லட்சம் அணுகுண்டு போட்டால் எந்த அளவுக்கு சக்தி வெளியாகி இருக்குமோ அந்த அளவு பாதிப்பைஏற்படுத்தியுள்ளது.
சுமத்ரா தீவு முதல் வடக்கு அந்தமான் வரை கடக்குள் 1,300 கி.மீ நீளமும், 200 கி.மீ அகலமும் கொண்ட பெரிய பிளவுஏற்பட்டுள்ளது. இந்தியா-பர்மிய கண்டத் தட்டுகள் உரசிக் கொள்ளும் இடத்தில் பர்மிய கண்டத் தட்டில் 15 மீட்டர் அளவுக்குஉயர்ந்து உள்ளது. இது ஒரு அதியமான நிகழ்வு. இது விஞ்ஞானிகளையே வியப்படைய வைத்திருக்கிறது.
இதற்கு பிறகு 600 முறை பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு அணுகுண்டு வெடிப்புக்குச் சமம். இதன்மூலம் பூமிக்குள் இருக்கும் அழுத்தம் வெளியாகும் போது அதனால் ஏற்படுகிற வெப்பம் கடல்நீரின் மேற்பரப்புக்கு வரும்போதுகடலின் மேற்பரப்பில் ஆங்காங்கே வெற்றிடங்கள் உருவாகிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப வெளிக்காற்று போவதால் தான்அடிக்கடி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது.
தற்போது மழைகாலம் என்பதால் ஒரே மாதத்தில் 4 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி அபரிதமான மழை பெய்துள்ளது.மேலும் டிசம்பர் 26ம் தேதி பூகம்பத்தால் பூமியின் அச்சு 2.5 செ.மீ சாய்ந்துவிட்டது. இதனால் பூமியின் சூழற்சி வேகம் 2676மைக்ரோ வினாடி அதிகரித்துள்ளது.
இதனால் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது சற்று குறையும். இப்படி பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்துள்ளதால் புவிஈர்ப்புவிசை அதிகரித்து மேலே இருக்கிற மேகங்களை இழுக்கிற தன்மையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மழை அதிகமாகபெய்கிறது.
தற்போது சாய்ந்துள்ள பூமி பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும். அது வரை நிலஅதிர்வு, சூறாவளி, புயல் மழை போன்ற இயற்கை பேரழிவுகள் நீடிக்கும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications