கடற் படையின் உதவி கோருகிறார் ஜெயலலிதா
சென்னை:
சென்னை மற்றும் காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் மூழ்கியுள்ள பகுதியிலிருந்து மக்களை மீட்ககடற்படையின் உதவியை முதலமைச்சர் ஜெயலலிதா கோரியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னையில் வெள்ளப் பெருக்கில் மூழ்கியுள்ள மக்களை மீட்க மாநில மீன்பிடி துறைப் படகுகள், தீயணைப்பு துறை படகுகள்ஆகியவை ஏற்கனவே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம், மணப்பாக்கம் கிராமங்களில் மழை வெள்ளம் வீடுகளுக்குள்புகுந்துள்ளதால் அங்கு மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க கடற்படை படகுகள் உதவியை கோரியுள்ளேன்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களிலும் மாவட்ட, கிராம மற்றும் வார்டு அளவில் குழுக்கள் அமைக்கஉத்தரவிடப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் வெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும். அரிசி ரேஷன் அட்டைவைத்திருப்பவர்களுக்கு ரூ.1,000, 10 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், ஒரு சேலை மற்றும் வேட்டி நிவாரணமாகவழங்கப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கன மழையால் பல ஏரிகள் உடைந்துவிட்டன. இதனால் அங்கெல்லாம்வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கன மழையால் மதுரவாயல் ஏரியிலிருந்து விருகம்பாக்கம் கால்வாய்க்கு நீர்வரத்துஅதிகரித்துள்ளதால் சில இடங்களில் கால்வாய்கள் நிரம்பி வழிகின்றன.
இதனால் மதுரவாயல் ஏரி நீரை கூவம் ஆற்றுக்குத் திருப்பிவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும் சென்னையில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications