மிதக்கின்றன வேளச்சேரி, கே.கே.நகர், அடையாறு, சைதை, மணலி, எண்ணூர் பகுதிகள்
மணலி:
கன மழையால் நிரம்பிவிட்ட புழல் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டதால் எண்ணூர், மணலி, திருவொற்றியூர் ஆகியபகுதிகளில் சுமார் 5,000 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
எண்ணூரில் அமைக்கப்பட்ட சுனாமி குடியிருப்புக்குள் உள்ள 2,000 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மணலியில் சுமார்1,000 வீடுகளிலும், திருவொற்றியூர் கார்கில் நகர் உ"ளிட்ட பகுதிகளில் 2,000 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.மணலியை அடுத்த ஆ.முல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளை நீர் சூழ்ந்துவிட்டதால் அந்தப் பகுதிகள் தனித் தீவுகளாகக்காட்சியளிக்கின்றன. அப் பகுதி மக்களை படகுகள் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பகுதிகளில் வெள்ளத்தால் மரங்கள், மின் கம்பங்களும் சரிந்துவிட்டன. வட சென்னையில் இந்த நிலை என்றால் தென்சென்னையும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நந்திவரம் ஏரி நிரம்பியதால் மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பல தெருக்களில் நீர் புகுந்து வீடுகளையும்ஆக்கிரமித்துவிட்டது. இதையடுத்து இரவோடு இரவாக அப் பகுதி மக்கள் மாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இப் பகுதி மக்களை தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புப் படையினர் மீட்டு வருகின்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறிய நீரால் வேளச்சேரி, கே.கே.நகர், அடையாறு உள்பட பல பகுதிகளில் சும்ர் 6,000வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
இப் பகுதிகளில் மக்களை இணை கமிஷ்னர் சைலேந்திரபாபு தலைமையிலான டீம் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றிவருகிறது.
அதே போல மடிப்பாக்கம், வெட்டுவாங்கேணி, துரைப்பாக்கம் ஆகியவையும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. சைதாப்பேட்டைமேற்குப் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணார் புகுந்துள்ளதால் அப் பகுதி மக்களை தீயணைப்புப் படையினர் மீட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications