உடைந்த ஏரியால் சென்னை-திருச்சி போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:
செங்குன்றம் ஏரி நிறைந்து நெடுஞ்சாலையில் வெள்ளம் ஓடுகிறது. இதனால் சென்னை-திருச்சி இடையிலான போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டை அடுத்துள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் செங்குன்றம் ஏரியும், விங்கம்பாக்கம் ஏரியும் நிரம்பிவழிகின்றன. இரு தினங்களாக பெய்த மழையால் ஏரிகளில் இருந்து நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துள்ளது.
இதனால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் பல அடி உயரத்துக்கு வெள்ளம் ஓடுகிறது. சுமார் கால் கி.மீ தூரத்துக்கு சாலையைநீர் முடியுள்ளது. இதனால் வாகனங்கள் மிக எச்சரிக்கையாகவும், மெதுவாகவும் செல்கின்றன.
மேலும் நீர் வந்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications