இலங்கை டெஸ்ட்: 2வது நாள் ஆட்டமும் ரத்து
சென்னை:
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட்கிரிக்கெட் போட்டியின் 2வது நாள் ஆட்டமும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
மைதானத்தை 2 அம்பெயர்களும் பிற்பகலில் ஆய்வு செய்த பிறகு ஆட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர்.முன்னதாக மழை நின்றதால் மதியத்திற்கு மேலும் ஆட்டம் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் விளையாடமுடியாத அளவுக்கு மைதானம் சேறாகிவிட்டதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
மழை காரணமாக நேற்றைய முதல் நாள் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏரிகள் திறப்பு:
இதற்கிடையே சென்னையில் பெய்து வரும் மழையால் சென்னையை சுற்றியுள்ள முக்கிய ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இவைஅனைத்தும் திறந்துவிடப்பட்டுள்ளதால் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் மழையால் பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. இப்போதுதொடரும் மழையால் இந்த ஏரிகள் மீண்டும் நிரம்பிவிட்டன. இதனால் இந்த ஏரிகள் திறந்துவிடப்பட்டன.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3212 மில்லியன் கன அடி. இதில் 3015 மி.கனஅடி தண்ணீர் இருக்கிறது. இதன் நீர்மட்டம் 35அடி. இதில் 34.60 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது.
இந்த பகுதியில் 132 மிமீ மழை பெய்துள்ளது. ஏரிக்கு 9810 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் 9660 கனஅடி தண்ணீர் வெளியே திறந்து விடப்படுகிறது.
பூண்டி ஏரியில் இருந்து பெருமளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால், ஊத்துக்கோட்டை, பொன்னேரி, சோழவரம் ஆகியஊர்வகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் ஏராளமான குடிசைகள் தண்ணீரில் மிதக்கின்றன.
செம்பரம்பாக்கம் ஏரி:
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3120 மில்லியன் கன அடி. நீர்மட்டம் 22 அடி. இப்போது ஏரி முழுமையாகநிறைந்துவிட்டது. இந்த பகுதியில் 255 மி.மீ மழை பெய்திருக்கிறது. இதன் காரணமாக ஏரிக்கு 12,000 கன அடி நீர் வருகிறது.இந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
இதனால் அடையாறு ஆற்றில் மிதமிஞ்சிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக குன்றத்தூர், மணப்பாக்கம்,சிறுகளத்தூர், அனகாபுத்தூர், ராமாபுரம், சைதாப்பேட்டை, கிண்டி பகுதிகளில் உள்ள குடிசைகள் வெள்ளத்தில் மூழ்கின. தாழ்வானஇடங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
புழல் ஏரி:
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,500 மில்லியன் கன அடி, நீர்மட்டம் 21.20 அடி. தற்போது 3262 மி.கனஅடி தண்ணீர்உள்ளது. ஏரியின் நீர்மட்டம் 21.06 அடியாக உள்ளது.
புழல் ஏரி பகுதியில் 146 மி.மீட்டர் மழை பெய்துள்ளதால் ஏரிக்கு 6620 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. ஏரியில் இருந்து 4200கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதனால் இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக செங்குன்றம் அருகேயுள்ளதிருநீலகண்டநகர், தமிழன் நகர், காஞ்சி நகர், மாரியம்மன் நகர், மாதா நகர் உள்பட 15 புறநகர் கிராமங்களை வெள்ளம்சூழ்ந்துள்ளது.
இந்த ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் சாமியார் மடம், நாரவாரிகுப்பம், வடகரை, தண்டல் கழனி, புழல், மஞ்சம்பாக்கம்,கொசப்பூர், மத்தூர், திருவொற்றியூர் வழியாக செல்வதால் இங்கு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தால்பாதிக்கப்பட்டுள்ளன.
சோழவரம் ஏரி:
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 881 மி. கனஅடி. இதில் 831 மி. கன அடி நீர் இருக்கிறது. மொத்த நீர் மட்டம் 17.86அடி. தற்போது 17.34 அடி தண்ணீர் உள்ளது.
இங்கு 113 மிமீ மழை பெய்து உள்ளதால் ஏரிக்கு 394 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து தண்ணீர்திறக்கப்படவில்லை. இந்த ஏரியும் திறக்கப்பட்டால் மேலும் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கும் அபாயம் ஏற்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications