அடையாறு ஆற்றில் சிக்கிய 5 பேர் ஹெலிகாப்படர் மூலம் மீட்பு
சென்னை:
![]() |
செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில்அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளம் தரைபுரண்டு ஓடியது.
பல்லாவரம் அரகே திருநீர்மலை-திமுடிவாக்கம் செல்லும் சாலையில் அடையாறு ஆற்றின் மீது பாலம் உள்ளது. இந்த பாலத்தின்வழியாகத்தான் திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை பகுதிக்கு செல்ல வேண்டும். நேற்று காலை அந்த ஆற்றுப் பாலத்தைமூழ்கியபடி வெள்ளம் சென்று கொண்டிருந்தது.
அபப்போது சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள கெமிக்கல் கம்பெனி ஒன்றில் சரக்குகளை ஏற்ற லாரியில் டிரைவர் ஏசையா(வயது 58), கிளீனர் பாண்டியன் (வயது 16) ஆகியோர் மினிலாரியில் சென்றனர்.
ஆற்றில் அதிக அளவு வெள்ளம் சென்று கொண்டிருந்த நிலையில் பாலத்தை கடந்து விடலாம் என்ற நம்பிக்கையில் மினிலாரியில் சென்ற ஏசையா, பாண்டியன் ஆகிய 2 பேரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இவர்கள் காப்பாற்றுங்கள்,காப்பாற்றுங்கள் என்று அபய குரல் எழுப்பியதால் அப்பகுதியில் சென்ற திருநீர்மலையை சேர்ந்த சந்திரன், மலைமேட்டை சேர்ந்தவிசுவநாதன் ஆகிய 2 பேரும் லாரியில் உள்ளவர்களை காப்பாற்ற சென்றனர். காப்பாற்றபோன 2 பேரும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.
இந்த நிலையில் திருமுடிவாக்கத்தை சேர்ந்த சங்கர் (வயது 25) என்பவர் நண்பருடன் அந்த பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது வெள்ளத்தில் சிக்கினார். உடனே ஊர் பொது மக்கள் டியூப் பயன்படுத்தி சங்கரை காப்பாற்றினார்கள். அப்போது ஆற்றில்அடித்து வரப்பட்ட குன்றத்தூரைச் சேர்ந்த சரவணபவா (வயது 25) திருமடிவாக்கம் பாலத்தின் முள்புதரில் சிக்கி உயிருக்குபோராடிக் கொண்டிருந்தார்.5 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல்கொடுத்தனர். தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் வந்து பார்த்த போதுஹெலிகாப்படரில் தான் மீட்க முடியும் என்று தெரிவித்தனர்.
தாம்பரம் பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த தாம்பரம் தொகுதி எம்எல்ஏ வைத்தியலிங்கம் இந்தசம்பவம் குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற கலெக்டர் வெங்கடேசன் உத்ரவிட்டார். உடனடியாக கடலோரகாவல் படையை சேர்ந்த ஹெலிகாப்படரில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 5 பேரையும் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications