கோவையில் வெள்ளப் பெருக்கு: மதுரையிலும் வெள்ள அபாயம்

Subscribe to Oneindia Tamil

ஆண்டிப்பட்டி:

கோவையில் பெய்து வரும் பலத்த மழையால் பொள்ளாச்சி மரப்பேட்டை வீதியில் ஓடைப்பாலத்தில் வெள்ளப்பெருக்குஏற்பட்டது. அதே போல் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் உயிர் நாடியாக உள்ள வைகைஆற்றில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

நேற்று விடிய விடிய பெய்த மழையால் வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதொடு போடி, உத்தமபாளையம்,பெரியகுளம் பகுதியிலும் மழை நீர் ஆறாக பொழிந்தது.

இதன் காரணமாக காட்டாறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடியது. ஒன்று திரண்டு வந்த வெள்ளம் வைகை அணையில் சேர்ந்தது.இதனால் அணைக்கு வினாடிக்கு 17,000 கன அடி நீர் வரத் தொடங்கியது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததால் அணையின்நீர்மட்டம் இன்று காலை 66.30 அடியை எட்டியது.

அணையின் மொத்த கொள்ளளவு 71 அடி ஆகும். இங்கு பொதுவாக 66 அடியை எட்டியதும் முதல் வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்படும். 68.5 அடி ஆனதும் 2வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். அதனை தொடர்ந்து 69 அடியை தொட்டதும்3வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். பின்னர் அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்படும்.

இன்று காலையிலேயே அணையில் 66.30 அடியை தொட்டு விட்டதால் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மைக் மூலம் எச்சரித்து வருகின்றனர்.

மேலும் வைகை ஆற்றின் கரை ஓர பகுதியில் குடியிருக்கும் பொது மக்கள் உடனே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறுதண்டோர மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வைகை அணையின் பாதுகாப்பை பலப்படுத்த லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட மணல் மூடைகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதே போல தொடர்ந்து நீடித்தால் அணை இன்றும் 2 நாளில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை-பொள்ளாச்சி:

கோவையில் பெய்து வரும் பலத்த மழையால் பொள்ளாச்சி மரப்பேட்டை வீதியில் ஓடைப்பாலத்தில் வெள்ளப்பெருக்குஏற்பட்டது. மின்நகர், சின்னாம்பாளையம் பகுதியில் உள்ள டிச்சிகுளத்தில் உடைப்பு ஏற்படவே ஓடைப்பாலத்தில் தண்ணீர் வரத்துகூடியது. இதனால் அந்த பகுதியில் உள்ள குடிசைகள் வெள்ளத்தில் மூழ்கின.

வேகமாக வந்த வெள்ளத்தால் இந்த பகுதியில் 50 வீடுகளின் சுவர்கள் மடமடவென இடிந்து விழுந்தன. சுமார் 125 வீடுகளுக்குள்வெள்ளநீர் புகுந்து பீரோக்கள், கட்டில்கள், பாத்திரங்களை அடித்துச் சென்றது.

பொள்ளாச்சி ஜோதிநகர் ஸ்ரீகாலனியில் உள்ள 50 வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. மேலும் நேரு நகரில் உள்ள கோட்டூர்சாலை பகுதியில் நள்ளிரவில் வெள்ளம் புகுந்தது. இங்கு 250 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளத்தில் சிக்கியவர்களை கயிறுகட்டி மீட்டனர்.

தங்கம்மாள் ஓடை, ஜெய்லானி பகுதி சாதிக் நகர், யூ.கே.சி.நகர், உடுமலை-பழனி சாலையில் கழுத்தறுத்தான் பள்ளம் ஆகியபகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. உடுமலை தெற்குபகுதியில் உள்ள ஏழு குளம் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டது. நாராயணன் காலனி, உடுமலை, திருப்பூர் சாலையிலும் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடியது.

இதில் மின் ஏற்பு நிலைய காம்பவுண்டு சுவரில் உடைப்பு ஏற்பட்டது. இது தவிர வி.ஜி. ராவ் நகர் மற்றும் முக்கோணம் பகுதியில்உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

கோவை மாவட்டம் துடியலூரில் பெய்த மழையால் சங்கனூர் பள்ளத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையால்மாங்கரை, ஆனைகட்டி பகுதியில் மரங்கள் வேரொடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொள்ளாச்சி ரயில் நிலையம் மற்றும் கோமங்கலம் பகுதியில் ரயில் தண்ட வாளத்தில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் ஒடுகிறது.இதனால் திண்டுக்கல், கோவை பயணிகள் ரயில் நள்ளிரவில் கோமங்கலம் அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் பொள்ளாச்சி பாலக்காடு செல்லும் பயணிகள் ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி கோரையாறு:

இந்த நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் பரவலான மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் சாலைகளில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடுகிறது.

மணப்பாறை, கே.கே.நகர், எடமலைப்பட்டிபுதூர் உள்பட பல பகுதிகளில் பெய்த மழை தண்ணீர் அனைத்தும் கோரையாற்றில்பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் கோரையாற்றில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக கருமண்டபம் பகுதியில் வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்து உள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு12,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து 11,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

முக்கொம்பில் இருந்து காவிரி ஆற்றுக்கு 931 கன அடி திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடத்துக்கு 9847 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்கனவேபாதிக்கப்பட்ட திருச்சிக்கு மீண்டும் ஆபத்து ஏற்படுமோ என்ற பீதியில் மக்கள் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+