சென்னை அடையாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் கோட்டூர்புரத்தில் உள்ள குடிசை மாற்றுவாரிய வீடுகள்வெள்ளத்தில் மூழ்கின. 3 மாடிகள் கொண்ட இந்தக் குடியிருப்புகளில் தரைத் தளத்தையும், முதல் மாடியையும் நீர்மூழ்கடித்துவிட்டது.
அந்த அளவுக்கு அதில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதையடுத்து அப் பகுதி மக்களை தீயணைப்புப் படையினர், மீனவர்களின்படகுகள் மூலம் போலீஸ் இணை கமிஷ்னர் சைலேந்திர பாபு தலைமயிலான படையினர் மீட்டனர்.
மேலும் அமைச்சர் ஜெயக்குமார், வட சென்னை அதிமுக மாவட்டச் செயலாளர் ஆதி ராஜாராம் தலைமையிலான குழுவினர்படகுகளில் சென்று உணவுப் பொருட்களை வழங்கினர்.
டிரவுசர் பனியன்களுடன் ஜெயக்குமார், சைலேந்திர பாபு ஆகியோர் நேரடியாகக் களமிறங்கி உதவிகளை வழங்கினர். இருவரும்பல பகுதிகளுக்கு நீந்திச் சென்று நிலைமையைக் கண்காணித்தனர். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகுகளைவரவழைத்து மக்களை வெளியேற்றினர்.
முன்னதாக கோட்டூர்புரத்தில் படகில் சென்று உதவிகளை வழங்கிக் கொண்டிருந்த அமைச்சமர் ஜெயக்குமார் படகில் இருந்துநீருக்குள் விழுந்தார். இதையடுத்து நீந்தியவாறே அந்தப் பகுதியைப் பார்வையிட்டார்.