சுனாமி நிதி: கருணாநிதி, ப.சிக்கு ஜெ. சாபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க மத்திய அரசு அறிவித்த நிவாரண தொகையில் இதுவரை ஒருவீடு கூட கட்டப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்குமுதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மழை வெள்ள நிலைமையை எனது அரசு மிகவும் திறம்பட கையாண்டு அனைத்து தரப்பினரின் பாரட்டையும் பெற்றகாரணத்தால், இதில் எந்தக்குறையும் கூற முடியாத சில எதிர்க்கட்சியினர் அதிலும் குறிப்பாக மத்திய அரசுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக தன்னை எண்ணிக் கொண்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி,

கடந்த ஆண்டு சுனாமிக்காக மத்திய அரசும், மக்களும் பல கோடி ரூபாய் நிதி அளித்ததாகவும் அந்த நிதி முறையாகபயன்படுத்தப்படாததால் தான் நிரந்தர வீடு கட்டித் தருவதாக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும், ஒரு வீடு கூடகட்டப்படவில்லை என்றும், சுனாமிக்கு மத்திய அரசு அளித்த பணம் என்னவாயிற்று என்பதற்கும் விடை தேவை என்றும்கூறியுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சுனாமி நிவாரண நிதியாக தமிழ்நாட்டுக்கு ரூ. 5,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாக கூறிவருகிறார்.

தமிழக கடற்கரையோரப் பகுதிகளை சின்னாபின்னமாக்கிய சுனாமி ஆழிப் பேரலையால் ஏற்பட்ட சேதங்களை சீர் செய்ய, தமிழகஅரசுக்கு ரூ. 4,800 கோடி நிதி உதவி வழங்கவேண்டும் என்று மத்திய அரசை எனது அரசு கேட்டுக் கொண்டது.

மேலும், சுனாமி ஆபத்தில் இருந்து தமிழகத்தை நிரந்தரமாக பாதுகாத்திட கடற்கரையோரம் அலை தடுப்பு அமைப்புகளைஉருவாக்க ரூ. 5,000 கோடி வழங்க மைய அரசை நாள் கேட்டுக் கொண்டேன். ஆனால் மத்திய அரசு சுனாமி நிவாரண நிதியாகவழங்கியது ரூ. 679.61 கோடி மட்டுமே.

சுனாமி நிவாரணத்திற்காக தமிழக அரசு இதுவரை செலவழித்துள்ள தொகை ரூ. 875.62 கோடி ஆகும். அதாவது மத்திய அரசுதமிழகத்திற்கு வழங்கிய தொகையை விட ரூ. 196.01 கோடி அதிகமாக தமிழக அரசு தனது நிதியில் இருந்து சுனாமி நிவாரணப்பணிகளுக்காக வழங்கியுள்ளது என்பது தான் உண்மை.

சுனாமியால் பாதிப்புக்குள்ளான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை சீர் செய்வதற்காக உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கிமற்றும் வேளாண்மை வளர்ச்சிக்கான உலக நிதியம் ஆகிய பண்பாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து தமிழக அரசு ரூ. 2,617.18கோடி மற்றும் வேளாண்மை வளர்ச்சிக்கான உலக நிதியத்திடம் இருந்து ரூ. 67.50 கோடி என்ற அளவுக்கு கடன் வாங்கியுள்ளது.

இதில் ஆசிய வளர்ச்சி வங்கி, தான் வழங்குகின்ற நிதியில் ரூ. 842.90 கோடியை மானியமாக வழங்குகிறது. ஆக, பன்னாட்டுநிறுவனங்களிடமிருந்து தமிழக அரசு ரூ. 2,274.98 கோடி அளவுக்கு கடன் பெற்றுள்ளது.

இந்தக் கடன் தொகையை தமிழக அரசு தான் பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்குத் திருப்பி செலுத்த வேண்டும், இந்த தொகையில்மத்திய அரசின் உதவியோ, மானியமோ ஒரு ரூபாய் கூட இல்லை என்பது தான் உண்மை. ஆனால் தமிழக அரசு பெற்றுள்ள கடன்தொகையைக் கூட மத்திய அரசு வழங்கும் உதவித் தொகையைப் போல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த சிதம்பரமும்,கருணாநிதியும் முற்பட்டிருக்கின்றனர்.

இவ்வாண்டு மத்திய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசும் போது சுனாமி நிவாரணத்திற்காக ரூ. 10,216 கோடிவழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த நிதி அமைச்சர் சிதம்பரம் தமிழகத்திற்கு ஏன் ரூ. 679.61 கோடியை மட்டுமேவழங்கியுள்ளார் என்பதை விளக்குவாரா?

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவருக்கு கூட இதுவரை வீடு கட்டித்தரப்படவில்லை என்று ஓர் அபாண்டமானகுற்றச்சாட்டை கருணாநிதி கூறியுள்ளார். காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைக்க, அழுக்காறு அறிவுக்குத் திரையிட, களங்கம் கற்பிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கருணாநிதி இந்தக் குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.

சுனாமி பாதிப்பால் தங்களது வீடுகளை இழந்த மக்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித்தரப்படும் வரையில் உடனடித் தேவையாக32,378 தற்காலிக வீடுகள் ரூ. 32 கோடிசெலவில் அமைத்துத் தரப்பட்டன.

சுனாமியால் முழுமையாக வீடு இழந்து பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிரந்தர வீடுகள் கட்ட அதற்கென தனியே நிலம் வேண்டும்.அதற்கென சிறப்பு நடவடிக்கைகள் மூலம் ரூ. 20 கோடி செலவில் 1,210 ஏக்கர் நிலம் தமிழக அரசால் கையப்படுத்தப்பட்டு நிரந்தரவீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசும், தமிழக அரசின் ஊக்குவிப்புடன் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்துமொத்தம் 45,802 நிரந்தர வீடுகளைக் கட்டி வருகின்றன.

சென்னையில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு வரும் 1,392 வீடுகளும் இதில் அடங்கும். இது வரை,989 நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 44,923 நிரந்தர வீடுகள் கட்டும் பணி மிக விரைவாக நடைபெற்றுவருகிறது.

மேலும் 3,957 வீடுகள் பழுது நீக்கி செப்பனிடப்பட்டுள்ளதுடன் 3,454 வீடுகளில் செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் உள்துறை 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வீடு கட்ட உதவித் தொகையாக ரூ. 650 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக ஒரு ஆணை வெளியிட்டது. இதில் குறிப்பிடப்பட்ட ரூ. 650 கோடியில் ஒரு சல்லிக்காசு கூட இதுவரைமத்திய அரசால் வழங்கப்படவில்லை. இதை மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தடுத்து நிறுத்திவிட்டாரா?

சுனாமியால் தங்களது வாழ்வாதாரங்களை இழந்த மீனவர்கள் கட்டுமரம் படகுகள் முதலியவற்றை புதிதாக வாங்குவதற்கும்,பழுது பார்ப்பதற்கும் ரூ. 441.08 கோடி ஒதுக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பும் இது நாள் வரை வெற்றுஅறிவிப்பாகவே உள்ளது.

தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு அடுத்தவர் இழப்பில் ஆதாயம் தேட முயலுகின்ற ஆதரவற்றோரின் அழு குரலைதனது நலத்திற்கு அடித்தளம் ஆக்கிக் கொள்ள முயலுகின்ற சுய நல அரசியல்வாதிகளை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+