டிசம்பர் 6: கோவையில் தீவிர பாதுகாப்பு
கோயம்பத்தூர்:
பாபர் மசூதி இடிப்பு 13வது நினைவு தினமான டிசம்பர் 6ம் தேதியை முன்னிட்டு பதட்டமான பகுதியான கோயம்பத்தூர்மாவட்டத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோயம்பத்தூரில் நகர போலீசார், ஆயுதப்படை பிரிவு , தமிழ்நாடு சிறப்புப் படை போலீஸ் பிரிவு ஆகிய படைகளில் இருந்து3,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதே போல் முக்கிய நகரங்களான மேட்டுப்பாளையம், திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் 2,000 பாதுகாப்பு அதிகாரிகள்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய சாலை சந்திப்புகள், பதட்டம் நிறைந்த பகுதிகள், முக்கிய வழிபாட்டு தலங்கள் ஆகியஇடங்களில் கூடுதலாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், அந்த பகுதிகளில்அதிகாரிகள் ரோந்து சுற்றி வருவதாகவும் போலீஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் இரவு ரோந்து சுற்றி வந்து சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை மறித்துசோதனை நடத்தி வருகிறார்கள்.
இதே போல் கோயம்பத்தூர் ரயில்வே போலீசார் கோவை ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.மேலும் ரயில்வே தண்டவாளங்களை அவ்வப்போது சோதனை செய்து வருகிறார்கள். கோயம்பத்தூர் ரயில் நிலையத்தில்முன்னச்சரிக்கையாக பார்சல் புக்கிங் நேற்று இரவு முதல் டிசம்பர் 8ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து முஸ்லீம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் பாபர் மசூதி இடிப்புநாளன்று கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பாதுகாப்பு:
அதே போல மதுரையிலும் முக்கிய கோயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில் உள்பட முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர் சோதனைக்குப் பிறகே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications