சென்னை, காஞ்சியில் வெள்ளத்துக்கு 20 பேர் பலி
சென்னை:
கடந்த சில நாட்களாகப் பெய் மழை, வெள்ளத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இதுவரை 20 பேர்பலியாகிவிட்டனர்.
திருவொற்றியூரைச் சேர்ந்த சங்கர், தியாகு ஆகியோர் அப் பகுதியில் கழுத்தளவு தண்ணீரில் நடந்து சென்றபோது அவர்களைவெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. இவர்களது உடல்கள் தேடப்பட்டு வருகின்றன.அதே போல சின்ன போரூரைச் சேர்ந்த அருண் என்பவர் தனது பகுதியை சுற்றி வளைத்த ஏரி நீரை தெர்மகோல் போம் மூலம்கடக்க முயன்றார். அப்போது அவர் கவிழ்ந்து தண்ணீரில் விழுந்து, மூழ்கி பலியானார்.
மாங்காடு அருகே ரகு என்ற வாலிபர் கண்மாய்க் கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த வெள்ள நீர்அவரை அடித்துச் சென்றது.
போரூர் கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மீனா என்ற 7ம் வகுப்பு மாணவியும் அந்தப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில்மூழ்கிப் பலியானார். கந்தன்வாடி அருகே ஒரு வாலிபரும், பள்ளிக்கரணை அருகே 2 பேரும் நீரில் மூழ்கி இறந்தனர்.
கே.கே.நகர் பகுதியில் தண்ணீரில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார். பாலவாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்ற இளைஞர்ஒருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரது உடல் இன்னும் கிடைக்கவில்லை.
அதே போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையில் வீடு இடிந்து 3 பேர் இறந்தனர். முகையூர் பகுதியில் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டு சிறுமி பலியானாள். மணப்பாக்கம் கால்வாயில் விழுந்து ஒருவரும் கிளியனூர் ஏரியில் விழுந்து ஒரு சிறுவனும்பலியாயினர்.
திருவள்ளூரில் மணவாள நகரைச் சேர்ந்த கார்த்திக் என்ற சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான். அதே போலபேரம்பாக்கத்தில் ஒரு சிறுவனும் வெள்ளத்தில் மூழ்கினான். மேலும் சிப்காட்டைச் சேர்ந்த மனோகரன் என்பவரும் மேலும்இருவரும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications