ஈரோடு, பொள்ளாச்சியில் வீடுகளுக்குள் வெள்ளம்
ஈரோடு:
விடிய விடிய பெய்த பலத்த மழை காரணமாக ஈரோடு, பொள்ளாச்சி பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
திருச்செங்கோடு வட்டாரத்தில் ஏரி, குளங்கள் நிரம்பியதால் பள்ளிபாளையம் நகருக்குள் நேற்று காலை வெள்ளம் புகுந்தது.இதையடுத்து ஈரோடு பள்ளிபாளையம் இடையே 8 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.நேற்று இரவு சங்ககிரி, திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், வெப்படை, ஈரோடு, சென்னிமலை, சிவகிரி, காங்கேயம்,பெருந்துறை, கொடுமுடி, தாராபுரம், பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதயடுத்து பள்ளிபாளையம்-திருச்செங்கோடு இடையே உள்ள வெள்ளிக்குட்டை ஏரி, சில்லாங்காடு ஏரி, ஐந்துபனை ஏரி,சின்ன ஆனங்கூர் ஏரி மற்றும் 40க்கும் மேற்பட்ட சிறு குளங்கள் நிரம்பி வழிந்தன.
ஏரி, குளங்களில் இருந்து வெளியேறிய உபரிநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து வெள்ளமாக பள்ளிப்பாளையம் நகருக்குள்புகுந்தது.
பள்ளிபாளையம் அன்னை சத்யா நகர், வசந்தா நகர், ஆவாரங்காடு, ஆவத்திபாளையம் பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும்மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
நாமக்கல்:
நாமக்கல் அருகேயுள்ள கீரம்பூர் ஏரி உடைந்ததால் அருகில் உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும், பலபகுதிகளில் ஏரி நிரம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
கீரம்பூர் ஏரி உடைந்து விளைநிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் சுமார் 60 ஏக்கரில் பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிர்கள்வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதே போல் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள வயல் வெளிகளிலும் தண்ணீர் புகுந்து கரும்பு,நெல், சோளம், மரவெள்ளி உள்ளிட்ட பயிர்கள் நாசமடைந்தன.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் மழை காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. 6 வீடுகள் முற்றிலுமாக இடிந்துதரைமட்டமாயின. பள்ளிப்பாளையம், கோட்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் மிக அதிகமாக வந்தது. அதனால்பொட்டுமேடு பகுதியில் தென்னந்தோப்பில் நீண்ட சுற்று சுவர்கள் உடைந்தன. அருகே உள்ள வீடுகளின் மேல் சுவர் விழந்ததால்பொட்டுமேடு பகுதியில் 6 வீடுகள் தரைமட்டமாயின.
தண்ணீர் வரத்து மிக அதிகமாகனதால் பொட்டுமேடு பகுதியில் கழிவு நீர்க் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ளவீடுகளுக்குள் நீர் புகுந்தது.
உடுமலை:
உடுமலையின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் மழையால் வெள்ளத்தில் மூழ்கின.அங்குள்ள அனைத்து குட்டைகள் மற்றும் குளங்கள் நிரம்பி வழிகின்றன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் ஆயிரக்கணக்கானமக்கள் பரிதவித்து வருகின்றனர். சுமார் 50 ஏக்கர் மக்காச்சோளப் பயிர்கள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அணைக்கு 20,124 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. எனினும் நேற்று மாலை நீர்வரத்து 19,000 கன அடியாக குறைந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications