ஜெ, கருணாநிதியிடம் மக்கள் கதறல்
சென்னை:
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் நேரில்பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
சூளைமேடு, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கூவம் ஆற்றின் மீது பாலத்தில் நின்று வெள்ளத்தைப் பார்வையிட்டார். பின்னர்மேத்தா நகர், திருவள்ளுவர் புரம், நெல்சன் மாணிக்கம் சாலை, அமைந்தகரை, அண்ணாநகர், என்எஸ்கே அவென்யூ, பெரியார்நகர்,செனாய் நகர், கோயம்பேடு, வட பழனி, அசோக் நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, ராம்நகர், கோட்டூர்புரம் ஆகியபகுதிகளைப் பார்வையிட்டு அப் பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
சுமார் 3.30 மணி நேரம் அவர் வெள்ளப் பகுதிகளில் இருந்தார்.
கருணாநிதி:
முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியும் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.
கோட்டூர்புரம், அடையாறு பாலம் ஆகிய பகுதிகளை மு.க. ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்களோடு பார்வையிட்டகருணாநிதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு அந்தப் பகுதி திமுகவினருக்கு உத்தரவிட்டார்.
கோட்டூர்புரத்தில் கட்டப்பட்டுள்ள 30 வருடம் பழைய குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஒரு மாடி வரை நீரில் மூழ்கிவிட்டது.அதைப் பார்க்க வந்த கருணாநிதியைப் பார்த்து, மேல் மாடிகளில் நின்றபடி மக்கள் அழுதனர். தங்களைக் காப்பாற்றக் கோரினர்.
இதையடுத்து கண் கலங்கிய கருணாநிதி, அவர்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும், மத்திய திமுகஅமைச்சர்கள் மூலமாக ராணுவப் படகுகளை இப் பகுதிக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
