ஆடிட்டர் வழக்கையும் புதுவைக்கு மாற்ற கோரும் ஜெயேந்திரர்
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்றியது போல ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கையும்புதுவைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ஜெயேந்திரர்.
சங்கரராமன் கொலை வழக்கை ஜெயேந்திரர் கோரிக்கையை ஏற்று சமீபத்தில் புதுவைக்கு மாற்றி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.தற்போது இவ்வழக்கு புதுவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.இந் நிலையில் ஜெயேந்திரர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சங்கரராமன்கொலை வழக்கு தமிழகத்தில் நடத்தப்பட்டால் அதில் நீதி கிடைக்காது என்று கோரியதன் பேரில் தான் அவ் வழக்கு புதுவைக்குமாற்றப்பட்டுள்ளது.
இதேபோல, என் மீது தொடரப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கிலும், விசாரணை தமிழகத்தில் நடந்தால் எனக்குநியாயம் கிடைக்காது. எனவே இந்த வழக்கையும் புதுவைக்கு மாற்ற வேண்டும் என்று அதில் ஜெயேந்திரர் கோரியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்துக்கு நாளை வருகிறது.
மாஜி காஞ்சி மட பக்தரான ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு இப்போது சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில்விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், விஜயேந்திரர் தம்பி ரகு, அப்பு உள்பட 11 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications