குஷ்பு: சிறுவனின் பெயரில் நீதிபதிக்கு மிரட்டல்
சென்னை:
![]() |
மாஜிஸ்திரேட் ஸ்ரீதரனின் மேட்டூர் இல்லத்துக்கு கடந்த 1ம் தேதி வந்த அந்தக் கடிதத்தில்,
குஷ்பு மீது வீண் பழியின் பேரில் பொய் புகாரைப் பெற்றுக் கொண்டு அவரை இழிவுபடுத்தும் வகையில் பிடிவாரண்ட்பிறப்பித்ததற்காக நாங்கள் தண்டனை கொடுக்க தீர்மானித்துள்ளோம்.
எனவே இன்று உங்கள் நீதிமன்றம், காவேரி கிராஸ் பாலம் ஆகிய இடங்களை சக்தி வாய்ந்த குண்டுகளை வைத்துதகர்க்கவுள்ளோம். முடிந்தால் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், வாழ்வா அல்லது சாவா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என்றுகூறப்பட்டிருந்த.
கடிதத்தை எழுதியவன் தனது முகவரியாக: இர்பான், மாநகராட்சிப் பள்ளி அருகே, அமைந்தகரை, சென்னை-29 என்று பெயர்-முகவரியைக் குறிப்பிட்டிருந்தான்.
அந்தக் கடிதம் சென்னை மேற்கு மாம்பலம் தபால் நிலையத்தில் போஸ்ட் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கடிதத்தைஅனுப்பியவனை மடக்க க்யூ பிராஞ்ச் போலீசார் விசாரணையில் இறங்கினர்.
போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த குறிப்பிட்ட முகவரியில் இர்பான் என்ற பெயரில் 4 வயது சிறுவன் இருப்பதுதெரியவந்துள்ளது. அந்த முகவரியில் வசிக்கும் இப்ராகிம் என்பவரின் மகன் தான் இர்பான்.
சிறுவனின் பெயரில் கடிதம் எழுதியது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இப்ராகிமுக்கு வேண்டாதவர்கள்யாரோ தான் இக் கடிதத்தை எழுதியதாகத் தெரிகிறது.
களமிறங்கும் விஎச்பி:
இதற்கிடையே குஷ்புவுக்கு எதிராக விஸ்வ இந்து பரிஷத் களத்தில் குதிக்கிறது.
அவருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக விஎச்பியின் மும்பை தலைவரும், அந்த அமைப்பின் உயர்மட்டக் கவுன்சிலின் உறுப்பினரான ஆனந்த் சங்கர் பாண்டியா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருமணத்துக்கு முன்பே பாதுகாப்பாக செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்ற குஷ்புவின் பேச்சு இந்துக் கலாச்சாரத்தின்ஆணி வேரையே தாக்குவதாக உள்ளது.
எல்லா மதங்களும் திருமணத்துக்கு முந்தைய செக்ஸை எதிர்க்கின்றன. ஓபன் செக்ஸ் என்ற பெயரில் இயங்கும் மேற்கத்தியக்கலாச்சாரம் அதற்கான பலனை தேவையற்ற கர்ப்பம், பால்வினை நோய், எய்ட்ஸ் மூலம் அனுபவித்து வருகிறது.
முற்போக்கு என்ற பெயரில் அபத்தம் பேசியிருக்கும் குஷ்புவுக்கும் அவரைப் போன்ற கருத்தை ஆதரிப்பவர்களுக்கும்தண்டனை வழங்கப்பட வேண்டும்.
குஷ்புவை எதிர்த்து விஸ்வ இந்து பரிஷத் நாடு முழுவதும் போராட்டத்தில் குதிக்கும் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications