ஏரிகளை திறந்துவிட்டது ஏன்?: ஜெ விளக்கம்
சென்னை:
சென்னைக்கு மேலும் ஏற்பட இருந்த கடுமையான சேதத்தைத் தவிர்க்கவே நகரைச் சுற்றியுள்ள ஏரிகள் திறந்துவிடப்பட்டதாகமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மழையால் ஏற்கனவே சென்னை தத்தளித்து வரும் நிலையில் முக்கிய ஏரிகளில் இருந்து அபரிமிதமான நீரை அரசுதிறந்துவிட்டுள்ளது. இந்த நீர் கூவம், அடையாறு மற்றும் பிற கால்வாய்கள் வழியாக நகருக்குள் புகுந்து களேபரப்படுத்திவிட்டது.வெள்ளம் குறைந்த பகுதிகளில் கூட மீண்டும் தண்ணீர் புகுந்தது. மேலும் இதுவரை வெள்ளம் பாதிக்காத இடங்களிலும் கூடவீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
அரசின் இந்தச் செயலுக்கு எதிராக கடும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. சில அதிகாரிகளின் தவறான ஆலோசனையால் இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டதாக எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இந் நிலையில் ஜெயலலிதா விடுத்துள்ள விளக்க அறிக்கையில்,
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கன மழையால் ஏற்பட்ட நிலைமை குறித்து நான் விரிவாக ஆய்வு செய்தேன். 2ம் தேதிமீனம்பாக்கத்தில் ஒரே நாளில் 29 செ.மீ. மழை பெய்தது. தாம்பரத்திலும் மழை கொட்டித் தீர்த்தது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அதன் உபரி நீரை அடையாற்றில்திறந்துவிட்டோம். அதற்கு முன்பே அதன் கரையோரம் இருந்த 45,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசென்றுவிட்டோம்.
தக்க நேரத்தில் தண்ணீர் திந்துவிடப்பட்டதால் செம்பரம்பாக்கம் ஏரி தப்பியது, மேலும் 45,000 குடும்பத்தினரையும்காப்பாற்றிவிட்டோம். ஏரிகள், சாக்கடைகள் எனது அரசால் முறையாகத் தூர் வாரப்பட்டிருந்ததால் தண்ணீர் மிக எளிதாகவெளியேறி வருகிறது.
அதே போல பூண்டி ஏரியிலும் ஏற்கனவே இருந்த 35,000 கன அடி நீரோடு மேலும் நீர் வந்து கொட்டியது. இதையடுத்து அந்தஏரி உடைவதைத் தடுக்கவும், சென்னை நகரைக் காக்கவும் நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதிலிருந்து கொஞ்சம் நீர் கூவத்தில் திறந்துவிடப்பட்டது.
அதே நேரத்தில் கூவத்துக்கு பல பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் தான் அதில் வெள்ளப் பெருக்குஏற்பட்டுள்ளது.
சென்னை நகரில் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை 8.80 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மின்சாரம் தாக்கி மக்கள் பலியாவைத் தவிர்க்கவே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
அதே போல எல்லா பகுதிகளிலும் பஸ் போக்குவரத்தும், பால் வினியோகமும் நடந்து வருகிறது. குடிநீர் லாரிகள் மூலம் நீரும்சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆங்காங்கே மருத்துவக் குழுக்களும் சென்று சிகிச்சைகள் அளித்து வருகின்றன.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications