மதுரைக்கு வெள்ள அபாயம் நீங்கியது
மதுரை:
வைகை அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளதால் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வெள்ள அபாயம்நீங்கியது.
மதுரை உள்ளிட்ட 5 தென் மாவட்டங்களின் பாசனத்திற்கு வைகை அணைதான் உயிர் நாடியாக உள்ளது. மேலும், திண்டுக்கல்,தேனி மாவட்டங்களின் குடிநீர்த் தேவையையும் வைகை அணை பூர்த்தி செய்கிறது.இந்த நிலையில் வைகை அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில், தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் அணை வேகமாக நிரம்பிவந்தது. இதனால் அணை உடைவதைத் தடுக்கும் வகையில் அணையைத் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவுசெய்தனர்.
இதையடுத்து வைகை ஆற்றங்கரையோரம் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்துமாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அணையின் மொத்த கொள்ளளவு 71 அடி ஆகும். இங்கு பொதுவாக 66 அடியை எட்டியதும் முதல் வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்படும். 68.5 அடி ஆனதும் 2வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். அதனை தொடர்ந்து 69 அடியை தொட்டதும்3வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். பின்னர் அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்படும்.
இந்த நிலையில் வைகை அணைப் பகுதியில் பெய்து வந்த பேய் மழை ஓய்ந்தது. இதனால் அணைக்கு வரும் நீரின் வரத்துவெகுவாகக் குறைந்தது. இன்று காலை அணைக்கு விநாடிக்கு 2000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இது பிற்பகலில் 1671கன அடியாக குறைந்தது.
இதைத் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய வாய்ப்பு குறைந்தது. மேலும், வெள்ள அபாயம் நீங்கியுள்ளதாகபொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வைகை அணையில் தற்போது 68.41 அடி நீர் இருப்பு உள்ளது. மேலும் இது குறைய வாய்ப்புள்ளதால் மதுரைக்கு வெள்ளஅபாயம் நீங்கியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications