காருடன் குளத்தில் பாய்ந்து குடும்பமே தற்கொலை
கோவை:
![]() |
| பின் சீட்டில் குழந்தையை அணைத்தபடி இறந்து கிடக்கும் கலைமணி. உடன் மகன் விஷ்ணு |
கோவையில் கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனம் நடந்தி வந்த என்ஜினியர் ஒருவர் மனைவி, 2 குழந்தைகளுடன் குளத்துக்குள்காருடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இவருக்குக் கடன் தந்த கந்து வட்டிக் கும்பல் பணம் கேட்டு மிரட்டியதால் இந்தமுடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.
தன்னையும், குழந்தைகள், மனைவியை காரின் சீட்டுகளுடன் கட்டிக் கொண்டு அவர் தண்ணீருக்குள் பாய்ந்தார். இதனால் நான்குபேரும் நீரில் மூழ்கி பலியாயினர்.
கோவை குறிச்சி குளத்தில் இச் சம்பவம் நடந்தது. குளத்துக்குள் மாருதி சென் கார் ஒன்று மிதப்பதைக் கண்ட மீனவர்கள்போலீசாருக்குத் தகவல் தந்தனர். இதையடுத்து தீயணைப்புப் படையினருடன் வந்த போலீசார் கிரேன் மூலம் காரை வெளியில்கொண்டு வந்தனர்.
2 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட அந்த காரில் பின் சீட்டில் இளம் பெண்ணும், இரு குழந்தைகளும் பிணமாகக்கிடந்தனர். அதில் கைக் குழந்தையை கையோடு அனைத்தபடி பெண் இறந்து கிடந்தார். முன், பின் சீட்டுகளுக்கு இடையில் ஆண்இறந்து கிடந்தார்.
நைலான் கயிற்றால் நால்வரும் ஒருவரோடு ஒருவர் கட்டப்பட்டிருந்தனர். இது தொடர்பான விசாரணையில்,
இறந்து போன ஆண் கோவை ராமநாதபுரம் தர்மராஜா லே-அவுட்டில் உள்ள பார்சன் அபார்ட்மெண்டைச் சேர்ந்த செந்தில் குமார்(வயது 35) என்பது தெரிய வந்தது. உடன் இறந்து கிடந்தது அவரது மனைவி கலைமணி (27), மற்றும் குழந்தைகளான விஷ்ணு(6), ஸ்ரீநிதி (வயது 2).செந்தில்குமாரும் கலைமணியும் 98ம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களாவர். இதனால் இரு குடும்பத்தினரும்இவர்களுடன் பேசுவதில்லை.
மனைவி, 2 குழந்தைகளை நைலான் கயிற்றோடு கட்டி அதனுடன் தன்னையும் கட்டிக் கொண்டு காரை குளத்துக்குள் பாய விட்டுதற்கொலை செய்து கொண்டுள்ளார் செந்தில்குமார்.
இவர் நடத்தி வந்த கம்யூட்டர்கள் விற்பனை நிறுவனத்தில் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் அதைகடந்த 10 நாட்களாக மூடிவிட்டார். தனது நிறுவனத்துக்காக வங்கிகள், பைனான்ஸ் நிறுவனங்களில் செந்தில் குமார் கடன்வாங்கியுள்ளார்.
இதில் பைனான்ஸ் நிறுவன கும்பலைச் சேர்ந்த யாரோ மிரட்டியதால் தான் செந்தில் குமார் இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும்என்று கருதப்படுகிறது.
தற்கொலைக்கு பயன்பட்ட மாருதி சென் தவிர, ஓபல் அஸ்ட்ரா கார் ஒன்றையும் இவர் வைத்திருந்தார் செந்தில் குமார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!













Click it and Unblock the Notifications